காத்தான்குடி கடற்கரையை ஆக்கிரமித்த லட்சக்கணக்கான மீன்கள் (படங்கள் இணைப்பு)
(எப்.எம்.பர்ஹான்)
மட்டக்களப்பு காத்தான்குடி வங்களா விரிகுடா கடலில் அதிசயம். லட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்குகின்றன. மக்கள் முண்டி அடித்துக்கொண்டு மீன்களை அல்லி எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
சுனாமிக்குப் பின்னர் காத்தான்குடி - கடற்கரையில் இவ்வளவு லட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்குவதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலை ஏற்படுகின்றது.
கால நிலை மப்பும் மந்தாரமுமாக காணப்படுவதோடு மட்டுமன்றி வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரையில் கடல் அலை பெருவாரியாக எழுவது வழக்கம். ஆனால், தற்போதைய நிலையில் அமைதியான முறையில் அலைகள் காணப்படுவதுடன் கடலும் அமைதியாகவே காணப்படுகின்றது.
காத்தான்குடி, ஆரையம்பதி, பூநொச்சிமுனை, கல்லடி, பாலமுனை ஆகிய அனைத்து கடலோர பிரதேசங்களிலும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது.
மீன்பிடி அத்தாங்கு மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை கொண்டு மீன்களை மக்கள் எடுத்து வருகின்றனர். காத்தான்குடி வரலாற்றில் இவ்வாறு லட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்குவது இதுவே வரலாற்றில் முதற் தடவையாகும்.
இவ்வாறு இலட்சக் கணக்கில் மீன்கள் கரையோதின்கினால் தேவைக்கு எடுத்துக் மீதமாக உயிருடன் உள்ள மீன்களை கடலில் சற்று தூரத்துக்கு கொண்டு சென்று விட்டு விட வேண்டும். இந்த மீன்கள் பெருத்து பெரிதாக வரும் பொது ஒருகுடும்பமே உண்ணலாம். சிறு சிறு மீன்களில் பத்து இருபது மீன்கள் தனியொரு நபருக்கே போதாமல் போய்விடும். எதிர்காலத்தில் இக்கடல் பிரதேசத்தில் மீன்கள் அரிதாகி விடக் கூடிய சாத்தியம் உண்டு.
ReplyDeleteஅதே போன்று இயட்கை அழிவுகள் என்று சொல்லப் படுபவை ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஊரார் பாவமன்னிப்பு செய்தது கொள்ளவும்.
2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் தொடராக, ஆச்சரியப் படத்தக்க அளவில் மிக அதிக எண்ணிக்கையான மீன்கள் பிடிபட்டதாக மருதமுனையைச் சேர்ந்த ஒரு மீனவர் அப்பொழுது தெரிவித்தார்.
ReplyDelete