மன்னார் நீதிபதியும், பரிதவிக்கும் முஸ்லிம்களும்..!
(ஆங்கிலத்தில் -கே.டி.ராஜசிங்கம்
தமிழில்-இர்ஷாத் றஹ்மத்துல்லா)
மன்னார் மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்னும் ஏன் மௌனம்?
அண்மையில் மன்னாரில் நடைப்பெற்ற சம்பவங்களையிட்டு எழுந்துள்ள கேள்விகளுக்கு விடைகளைக்காண வேண்டியுள்ளது. ஐ_லை மாதம் 16ம்,18ம் திகதிகளில் உப்புக்குள மீனவ சமூகம் மன்னார் நீதிமன்றத்திற்கு வெளியே எதற்காக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்கள்.? 300க்கு மேற்பட்ட மீன்பிடியாளர்கள் ஐ_லை மாதம் 16ம் திகதியும,; 500க்கு மேற்பட்ட மீனவர்கள் ஐ_லை மாதம்18ம் திகதியும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இவ்விரு பேரணிகளும் மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஐ_ட்சனுக்கு எதிரானவையாகும். எதற்காக பேரணி நடத்தினார்கள்? அவர்களின் குற்றச்சாட்டு என்ன? இந்த குற்றச்சாட்டுக்கள் எவை என்பதையும் பேரணி எதற்காக நடத்தினார்கள் என்பதையும் யார் விசாரணை செய்வார்கள்?
2009ம் மே மாதம் 25ம் திகதி நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஐ_ட்சனுக்கு எதிராக குற்றச்சாட்டொன்று நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பள்ளிவாயிலனால் சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்களை நீதிச்சேவை ஆணைக் குழச் செயலாளர் பெற்றுக் கொண்டதாகவோ, அல்லது அவற்றுக்கான நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை. அத்துடன் பள்ளி நிர்வாகத்தினர் ஒர் அதிகாரி தங்கள் பகுதிக்கு வந்து விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொணடிருந்தனர்;. இதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என யுளயைn வுசiடிரநெ அறிந்துள்ளது.
இதன்பிறகு இவ்வருடம் ஐ_ன் மாதம் ஜந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதாவது மன்னார் நீதவான் சுயமாக செயல்படவில்லை என்றும் பக்கசார்பாக உள்ளார் என்றும் குறை கூறப்பட்டுள்ளது. இந்தச் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுத்ததாக அறியப்படவில்லை. இலங்கையின் அரசியல் யாப்பின்படி மாவட்ட நீதிபதிகளின் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீதிச்சேவை ஆணைக்குழு கட்டுப்படுத்தும.; அதேவேளை உயர்நீதிமன்ற ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஐனாதிபதியின் விதப்புரைக்கேற்ப நீதிச்சேவை ஆணைக்குழு கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமகன் ஒருவர் மஐPஸ்ரேட் நீதிபதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக் குற்றச்சாட்டுக்களை கூற வேண்டுமானால் நீதிச்சேவை ஆணைக் குழுவை நாடவேண்டிய அதே வேளை உயர்நீதிமன்ற நீதிபதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை குற்றச்சாட்டுக்களை கூற வேண்டுமானால் ஐனாதிபதியை நாடவேண்டும். ஐனாதிபதி நீதிச்சேவை ஆணைக்குழு மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
நீதிமன்றங்கள் மக்களது நியாயதிக்கத்தை அமுல்படுத்துகையில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் கதவுகள் எப்பொழுதும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்குத் திறந்திருக்கவேண்டும். மக்கள் தெரிவுசெய்த பிரதிநிதி, மக்களுக்காக ஒரு பிரதிநிதித்துவத்தை எற்படுத்துவதற்கு ஏற்;புடையவர். அரசியல் யாப்பின் சரத்து 4ஊ இதுபற்றி தெளிவாக பின்வருமாறு விளக்கியுள்ளது. 'மக்களின் நியாயதிக்கமானது பாராளுமன்றத்தின் மூலம் நீதிமன்றமூடாக நடைமுறைப்படுத்தப்படும் என்றாலும் நபர் ஒருவர் இது தவிர்ந்த வேறுவழிகளில் நீதிச்சேவைஆணைக்குழுவின் நடவடிக்கை மீது செல்வாக்கு செலுத்த நினைப்பதோ அல்லது அதன் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக கூறமுடியும் .
நீதிச்சேவை ஆணைக்குழுவின் கட்டளை தீர்மானத்தின் மீது அதிக்கம் செலுத்துவதோ அல்லது செலுத்த முயல்வதோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் சம்பந்தமான பிரதிநிதித்துவப்படுத்தலிருந்தும் வேறுபட்டதாகும். பொதுமக்களின் பிரதிநிதித்துவதற்கான இக் கதவுக்கள் முடப்பட்டியிருக்குமாயின் பேரணி நடத்துவதற்கான கதவுகள் வலுக்கட்டயமாக திறக்கப்படும் அநேகமாக மன்னாரில் இதுவே நடைப் பெற்றிருந்தது.
பின்புலம்
1990ம் ஆண்டு உப்புக்குளத்திலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம் மீனவர் குடும்பங்கள், தமிழீழ விடுதலைப்புலிகளினால் தழிழ்பேசும் முஸ்லீம்கள் என்ற காரணத்திற்காக பலவந்தமாக வெளியேற்றப்பட்டு புத்தளத்திலும் பிற இடங்களிலுமுள்ள அகதிமுகாம்களில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக வசித்துள்ளார்கள். 2005ம் ஆண்டு ரணில் பிரபாகரன் ஒப்பந்தம் காரணமாக ஏற்பட்ட தற்காலிக சமாதான காலத்தில் உப்புக்குள மீனவர்கள் தமது தாயகத்திற்கு திரும்பியபோது விடத்தல் தீவைச்சேர்ந்த தமிழ்மீனவர்கள் தமது உப்புக்குள மீன்பிடித்துறைமுகத்தை பயன்படுத்துவதைக் கண்டனர். என்றாலும் விடத்தல் தீவு மீனவர்கள் நிரந்தர சமாதானம் ஏற்படும் பொழுது வெளியேற ஒப்புதல் அளித்ததன் காரணமாக உப்புக்குள மீனவ குடும்பங்கள் நிரந்தரமாக உப்புக்குளத்தில் மீள்குடியேறத் தீர்மானித்தனர்.
2009ம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த பின்பு உப்புக்குள மீனவ குடும்பங்கள் அவர்களது சொந்த மீனவ கிராமத்திற்குத் திரும்பிய போது விடத்தல் தீவு மீனவர்கள் தங்களுக்கென வேறான ஒரு மீன்பிடித்துறை தரப்படுமானால் உப்புக்குளத்தை விட்டகல ஆயத்தமாகவிருந்தனர். மன்னார் பொலிஸ் சுப்பாரின்டன்ட், மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் நடைப் பெற்ற பல சுற்றும் கலந்தலோனைகளையடுத்து விடத்தல் தீவைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்கு மாற்று மீன்பிடித் துறையொன்றை வழங்க முன்வந்ததன் காரணமாக சில தினங்களுக்குள் அவர்கள் புதிய இடத்திற்கு செல்வதற்கு ஒப்புதல் அளித்தனர். என்றாலும் சிலவாரங்கள் கழிந்தும் இந்நிகழ்வு இடம்பெறவில்லை.
இவை அனைத்தும் எவ்வாறு ஆரம்பித்தன?
2012 ஜூலை 13ம்திகதி சில முஸ்லீம் மீனவர்கள் அன்றைய தமிழ் மீனவர்கள் அன்றைய தினம் உப்புக்குள முஸ்லிம் மீனவர்களைச் சந்தித்து இவ்விடயம் சம்பந்தமாகத் தீர்வொன்று காணும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்று தெரிவித்தனர். ஆனாலும், இதனை உதாசீனம் செய்துவிட்டு தமிழ் மீனவர்கள் அன்று மீன்பிடிக்கக் சென்றுவிட்டனர். இதன்பிறகு, சில முஸ்லீம் மீன்பிடியாளர்கள் தமிழ் மீனவர்களது கிடுகினாலான ஓலைக் கொட்டில்களை சேதமாக்கிவிட்டனர். தமிழ் மீனவர்கள் பொலிஸாரிடம் முறையிட்டதுடன் ரூபா 14 இலட்சம் நட்ட ஈடும் கோரினர்.
வடமாகாணத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றபட்ட முஸ்லிம் மக்கள் ஆணைக்குழுவானது (இருவர் கொண்ட) உண்மையைக்கண்டறியும் குழு ஒன்றை மன்னாருக்கு அனுப்பியது. இக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி தேவநேசன் நேசையா மற்றும் திருமதி சுலானி கொடிசுhர ஆகியோர் அடங்கியிருந்தனர். அவ்விடத்திற்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டதுடன் தமிழ் மீனவர்களுடன் கலந்தாலோசித்து விட்டு ' சில ஒலைக்குடில்களும் ஒரு குடிலின் கூரைத் தகடுகளுமே சேதமாக்கப்பட்டுள்ளன என்ற வெளிப்படை' என அவர்கள் அறிக்கைவிட்டனர்.
குற்றச்சாட்டின் உண்மையான பெறுமதியைக் கருத்தில் கொள்ளாது ஆரம்பக்குற்றச்சாட்டின் அடிப்படையில் ரூபா 14 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் முஸ்லீம்களுக்கு எதிராக 39ஃ2012 என்ற அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
ஏன் இந்தப்பேரணி?
நீதிச்சேவை ஆணைக் குழுவிற்கு பள்ளிவாயில் நிருவாகத்தினர் மூலமும் சிவில் சமூகம் மூலமும் ஏற்கனவே இதனைப் பிரதிநிதிப்படுத்திய முஸ்லீம்கள் மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஐ_ட்சன் ஒரு தமிழராக இருப்பதனால் தமிழர்களுக்குப் பக்கச்சார்பாக முன்பும் பலமுறை தீர்ப்பு வழங்கியதாக அவருக்கெதிராக ஐ_லை 16ம்திகதி மன்னார் பட்டணத்தில் நீதிமன்றுக்கு அருகில் பேரணி ஒன்றை மேற்கொண்டனர். அமைதியான முறையில் எது விதமான அசம்பாவிதங்களுக்குமின்றி சுமார் மூன்று மணித்தியாலங்கள் இப்பேரணி நடைப்பெற்றது.
ஐ_லை மாதம் 16ம் திகதி உப்புக்குள மீன்வாடி வழக்கு நீதிபதி ஐ{ட்சன் முன்னிலையில் அதே நாளில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்பு நடந்த கடப்பாடுகளையும், ஒப்பந்தங்களையும் நிராகரித்து, தமிழ் மீனவர்கள் மீன்பிடிதுறையை விட்டுவெளியேறுவதாக கொடுத்த ஒப்புதல்களை புறக்கணித்து மன்னார் நீதவான் ஐ{ட்சன் தனது தீர்ப்பை வழங்கியதானது அங்கு மீண்டும் மீள்குடியேறவும் தங்களது வாழ்வாதார வசதிகளை மீண்டும் தொடங்குவதற்கு ஆவலாக இருந்த மக்களுக்கு ஒட்டுமொத்த ஏமாற்றமாக அமைந்தது. ஐ_லைமாதம் 16ம் திகதி 2012ம் ஆண்டு நீதிமன்ற கட்டளை பின்வருமாறு அமைந்தது.
Ø விடத்தல் தீவு தமிழ் மீனவர்களை வெளியேற்றுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை (அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்த நிலையில்)
Ø பொலிஸாரிடம் தமிழ்மீனவர்களை தொடர்ந்து மீன்பிடிப்பதற்கு பாதுகாப்பு வழங்குமாறு கட்டளையிடப்பட்டது. இதன்பிறகு இந்த தீர்ப்பால் கோபமடைந்த முஸ்லீம் மீனவர்கள்; 18.04.2012 அன்று காலை 7மணிக்கு மன்னார் நீதிமன்றத்திலும் நீதிவானிடமும் நீதி கேட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்கள். இந்த இரண்டாவது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது சில தனியார் சொத்துக்களுக்கும் நீதிமன்ற சொத்துக்களுக்கும் கல்லெறியப்பட்டதன் காரணமாக சேதம் ஏற்படுத்தப்பட்ட வகையில் பின்வரும் முக்கிய காரணிகளை அவதானிக்கலாம்.
18.07.2012 நடைப்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தில் பிரதான இயல்புகள்
Ø உப்புக்குள மீன்பிடியாளர்கள் காலை 9 மணிக்கு நீதிபதிக்கு எதிரான ஒரு சுலோகம் உட்பட பல சுலோகங்களை தாங்கியவாறு மன்னார் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள கடைத் தெருக்கலில் பெருமளவு திரண்டிருந்தனர். மன்னார் (நீதிபதிக்கு அளித்த பொலிஸாரின் விசாரணை இல-டீஃ403ஃ12)
Ø நீதிபதி பிரச்சினை ஏற்படுமாயின் எதிர்ப்பு ஊர்வலத்தை கலைக்குமாறும் இல்லாவிட்டால் அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலத்தை நடாத்த அனுமதிக்குமாறு பொலிஸாருக்கு அனுமதியளித்திருந்தார். (மன்னார் தலைமையக பொலிஸ் இஸ்பெக்டர் நீதிவானுக்கு 18.07.2012ம் அளித்த அறிக்கை இலக்கம் டீ403ஃ12)
Ø இந்த விடயம் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த மக்களிடம் பொலிஸ் இஸ்பெக்டர் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
Ø பொலிஸ் விசாரணைக்கமைய சில எதிர்ப்ப ஆர்ப்பாட்டக்காரர்கள், கோஷமிட்டுக் கொண்டு போக்குவரத்தை தடைசெய்த அதேவேளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது நண்பகல் 12 மணிவரையில் எவ்வித அசம்பாவிதம் இன்றி நடைபெற்றது.
Ø இந்த எதிhப்;பு ஆர்ப்பட்டமானது அதிக சப்தமுடையதாக இருந்ததால் நீதிவான் பொலிஸ் இஸ்பெக்டரைத் தனது காரியாலயத்திற்கு (இருதரம்) அழைத்து எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இவ்விடயம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்ட்ட போதும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
Ø தனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அதிகளவான மக்களுடன் முறுகல் நிலை ஏற்படக் கூடிய சாத்தியத்தை உதாசீனம் செய்துவிட்டு நீதிபதி அந்தோனிபிள்ளை ஐ_ட்சன் இந்த வேளை தனது உத்தியோகபூர்வ சீருடையுடன் நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பபட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அருகாமையில் வந்துள்ளார்.
Ø வெளியில் வந்தவர் துப்பாக்கி பிரயோகத்தைச் செய்து கூட்டத்தை கலைக்குமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டிருக்கின்றார் (இது கானொளி காட்சி கிடைக்கப் பெற்றுள்ளது)
Ø கலகம் அடக்கும் பொலிஸார் தமது கண்ணீர்ப் புகைத் துப்பாக்கியுடன் ஆயத்தமானவுடன் பாமர மீனவ சமூகம் நிலை குலைந்து அங்கும் இங்கும் ஒடினர். இதைத் தொடர்ந்து கண்ணீர்புகை அடிக்கப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது.
Ø பிற்பகல் 12.30மணியளவில் அவ்விடத்திலிருந்து தப்பியோடியவர்களில் சிலர் கண்ணீர் புகை வந்த திசையிலிருந்த பொலிஸாரை நோக்கி கற்களைப் பொறுக்கி எறிந்;த போது பொலீஸார் காயமடைந்ததுடன் நீதிமன்றத்திற்கும் சேதம் ஏற்பட்டது. (கலகம் அடக்கும் பொலிசாரின் வாக்குமூலம்) அந்த பகுதியிலிருந்த சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
Ø எந்தசந்தர்ப்பத்திலும் இவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் புகவோ எத்தனிக்கவோ இல்லை.
அவதானிப்புக்கள்.
Ø மக்கள் கும்பலின் தாக்கம் என அழைக்கப்பட்ட இது ஊடகங்களினால் மிதமிஞ்சிய அளவில் திரித்துக் கூறப்பட்டது.
Ø தாக்கக் கூடிய மக்கள் கூட்டமானது 3 மணித்தியாலயங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தி பொருத்திருந்திருக்கமாட்டார்கள்.
Ø இநத எதிர்ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான பெண்களும் குழந்தைகளும் பங்கு பற்றியுள்ளனர். இந்த நிலையில் எதிhப்;பு ஆர்ப்பாட்டக் குழுவினர் நீதிமன்ற வளாகத்திலுள்ளோ ஆனால் பகுதிகளுக்கோ அத்து மீறி பிரவேசிக்கவுமில்லை.
Ø நீதிபதி வெளியே வந்து பொலிஸாருக்குத் துப்பாக்கி பிரயோகம் செய்து மக்களை கலைக்குமாறு கட்டளையிடும் வரை எதிhப்பு; ஆர்ப்பாட்டம் சட்ட பூர்வமாகவே இருந்துள்ளது. இது நண்பகல் 12மணிவரை தொடர்ந்துள்ளது.
Ø சுமார் 500 எதிhப்பு; ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை அடித்த வேளை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 12.15 வரை அவ் விடத்தை விட்டு ஒடிசென்றவர்களில் சிலர் கற்களை எரிந்துள்ளார்கள்.
Ø கல்லெறிந்;தவர்களை அடையாளம் காண ஒழுங்கமைப்பான அடையாள அணிவகுப்பு நடைபெறவில்லை. எனவே முறையான சட்ட நடை முறை பின்பற்றப்படவில்லை.
Ø நீதிபதி தழிழர்களுக்கு பக்கசார்பாக இருந்தார் என்பதற்கான எதிர்ப்பு ஆரப்பாட்டம் சட்டரீதியானது இதுவரை ஏன் இந்த மிகச்சாதாரண படிக்காத பாமர மீனவர்கள் வெளியே வந்து எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதற்கான எந்தவிதமான விசாரணையும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியாயமான ஒரு பார்வையை வெளிப்படுத்தியுள்ள கட்டுரை.
ReplyDeleteநியாயமான முறையில் விடயங்களை அணுகி, நிதானமாக முன்வைத்துள்ள கே டி ராஜசிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
தமிழ் மக்களும், ஏனைய சமூகங்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும்.