Header Ads



பள்ளிவாசலில் வைத்து தேசிய காங்கிரஸ் ஆதரவாளர் மீது வாள்வெட்டு


தினகரன்

அட்டாளைச்சேனை பாலமுனை ஹுசைனியா பள்ளிவாசலில் வைத்து தேசிய காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் ஒருவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

(ஞாயிறு) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் படுகாயமடைந்தவர் அட்டாளைச்சேனை பிரதான வீதியை சேர்ந்த பத்திரிகை விற்பனை முகவர் பாறூக்கின் மகன் சஹிர் (22 வயது) என்பவராவார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்திலிருந்து தனது நண்பர்கள் சிலருடன் பாலமுனை பிரதேசத்துக்கு ஜமாஅத் சென்றவர்கள் அப்பகுதி பள்ளிவாசலுக்கு சென்று தொழுதுவிட்டு இருக்கும்போது அங்குவந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சுமார் 7 பேர் தன்னை வாளால் வெட்டி காயம் ஏற்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் அவசர சிகிச்சையின் போது இடது கையின் ஒருவிரல் நீக்கப் பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாகாண சபை தேர்தலின்போது தேசிய காங்கிரஸ் கட்சிக்கு, தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தினால் தன்னை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் முக்கிய சந்தேக நபர்கள் தலைமறைவாகி யிருப்பதாகவும் இவர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

3 comments:

  1. நான் கேழ்விப் பட்டேன் தாக்கப்பட்டவர் SLMC ஆதரவாளர் ஒருவரை தேர்தல் காலத்தில் தாக்கியதாகவும் அதன் விளைவாகத்தான் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் அல்லாஹு அஹ்லம்

    ReplyDelete
  2. இதுதாண்டா வீரம்.வீரமான விளையாட்டு.supper கலாச்சாரம்.தொடரட்டும்.

    ReplyDelete
  3. thambi unmaiyana oru muslim masjethi
    l vaithu vaddamadan khafeer koda ithai sayya madan

    ReplyDelete

Powered by Blogger.