Header Ads



அரசு - முஸ்லிம் காங்கிரஸ ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்து


அரசாங்கமும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசும் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பான விபரங்களை, அரசாங்கம் வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

அரசாங்கத்திற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசிற்கும் இடையே, கிழக்கு மாகாண நிர்வாகம் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள விடயம் தெளிவாக விளங்குகின்றது. ஆனால் அந்த ஒப்பந்தம் குறித்த விபரங்களை வெளியிட அரசாங்கம் தயங்குகின்றது. இருந்த போதும் கிழக்கு மாகாணத்தில் இனவாதத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூண்டியதாக கூறிய அரசாங்கத்திடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம். கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கு அரசாங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் மேற்கொண்ட உடன்படிக்கையினை வெளியிட வேண்டும் என நாம் கோருகின்றோம். அது போன்று, அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும், மூக்கை நுழைக்கும் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர்கள் கசாயம் குடித்த ஊமைகள் போல இருப்பதற்கான காரணம் என்னவென்பதை அறிய நாம் விரும்புகிறோம்.

இதனிடையே, தேசிய போக்குவரத்துக்காக இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ள பேரூந்துகளின் தரம் குறித்து உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பேச்சாளர் கயந்த கருணாதிலக கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது போக்குவரத்தை மேம்படுத்த 3 ஆயிரம் பயணிகள் பேரூந்துக்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதனை நாம் வரவேற்கின்றோம். இருப்பினும் இறக்குமதி செய்யப்படும் இந்த பேரூந்துக்களின் தரம் குறித்து உறுதியான சான்றிதழ்களை வெளிப்படுத்த வேண்டும். ஏற்கனவே புகையிரத இயந்திரங்கள் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான மூலப் பொருட்கள் சீனாவினால் வழங்கப்பட்டன. அவற்றின் ஊடாக நாம் பெற்ற அனுபவத்தை கவனத்தில் கொண்டு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பயணிகள் பேரூந்துக்களின் தரம் குறித்த உத்தரவாதம் பெறப்பட வேண்டும். sfm

No comments

Powered by Blogger.