Header Ads



கடாபியின் படுகொலை பின்னணியில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ்சர்கோஸி



பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி சார்க்கோஸியின் உத்தரவின் பேரில் அந்நாட்டு இரகசிய சேவைப் பிரிவைச் சேர்ந்த ஒருவராலேயே லிபிய முன்னாள் தலைவர் கடாபி கொல்லப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் அதிபராக இருந்த நிக்கோலஸ் சர்கோசியின், உத்தரவின் பேரில், பிரான்ஸ் நாட்டின் உளவுப் பிரிவினர் தான் கடாபியை சுட்டுக்கொன்றனர் என, "டெய்லி மெயில்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடாபி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தனது சொந்த ஊரான கிரிட்டில் வைத்து கொல்லப்பட்டார். லிபிய புரட்சியில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த வெளிநாட்டு முகவர் ஒருவரே கடாபியை கொன்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்படி வெளிநாட்டு முகவர் பிரான்ஸ் நாட்டவராக இருக்கலாம் என இத்தாலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லிபிய புரட்சிக்கு பிரான்ஸ் நிகொலஸ் சார்க் கோஸியின் அரசாங்கம் ஆரம்பம் முதல் மிகுந்த ஆதரவளித்து வந்தது. 2007ஆம் ஆண்டு தேர்தலில் சார்க்கோஸி வேட்பாளராக போட்டியிட்ட போது அவருக்கு மில்லியன் கணக்கான பண உதவி வழங்கப்பட்டமை உள்ளடங்கலாக அவருடனான தனது உறவை அம்பலப்படுத்தப் போவதாக கடாபி பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இதன் காரணமாக கடாபியை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மௌனமாக்குவதற்கு தேவையான முயற்சியில் சார்க்கோஸி ஈடுபட்டதாக திரிபோலி வட்டாரமொன்றை மேற்கோள்காட்டி மேற்படி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் மத்தியில் ஊடுருவிய வெளிநாட்டு முகவரான 22 வயது இளைஞரே கடாபியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண் ஒம்ரான் ஷபான் என்ற மேற்படி இளைஞர் கடாபியின் ஆதரவாளர்களால் கடந்த ஜூலை மாதம் தாக்கப்பட்டதையடுத்து பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.

லிபியாவை, 42 ஆண்டு காலம், ஆட்சி செய்தவர் மும்மர் கடாபி, 69. துனிசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று லிபியாவிலும், கடாபியை பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டத்தில், ஈடுபட்டனர். ஆப்ரிக்க கூலிப்படையினரை வைத்து, போராட்டக்காரர்களை கொன்று குவித்தார் கடாபி. இதன் காரணமாக, கடாபியின் வெளிநாட்டு கணக்குகள், முடக்கப்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், லிபியா மீது, பொருளாதார தடை விதித்தன. ஒரு கட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி, அரசு படைக்கு எதிராக சண்டையிட்டனர். கடாபியின் மகனை சிறை பிடித்தனர். அரண்மனையிலிருந்து ஓடி தலைமறைவானார் கடாபி. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 20ம்தேதி, தனது சொந்த ஊரான சிர்டியில், கால்வாய் ஒன்றில் மறைந்திருந்த போது, நேட்டோ படைகளின் உதவியுடன், கிளர்ச்சியாளர்கள், கடாபியை சுற்றி வளைத்தனர். கடாபி சரணடைய முன்வந்த போதும், அவர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். 


1 comment:

  1. இவர் மட்டுமல்ல இன்னும் பலர் இருக்கலாம்.கோட் சூட் போட்டிருப்பதால் தப்பிவிடுவார்கள்

    ReplyDelete

Powered by Blogger.