Header Ads



நீரோடையில் குளித்த கர்ப்பிணி பிரவசம் - தாயும், சிசுவும் பரிதாப மரணம்


ஸாதிக் ஷிஹான்

ஓடை ஒன்றில் குளிக்கச் சென்ற நிறை மாத கர்ப்பி ணித் தாய் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் தோட்டப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் நண்பகல் 12.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குளிக்கச் சென்ற இடத்தில் பிரசவ வலி வந்து அந்த கர்ப்பணித் தாய் குழந்தையை தானாகவே பிரசவித்துள்ள அதேசமயம் தாயும், குழந்தையும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். ஹட்டன் தோட்டத்தின் முதலாவது இலக்க பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சுப்பையா சிவநாயகி என்ற இளம் தாயே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இளம் நிறைமாத கர்ப்பணித் தாய் வழக்கம் போல் ஆடைகளை துவைத்து குளிப்பதற்காக குளிக்கும் இடம் ஒன்றுக்கு சென்றுள்ளார். இதன் போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ள நிலையில் குழந்தையைத் தானாகவே பிரசவித்துள்ளார். இதில் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஹட்டன் தோட்டப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஹட்டன் மஜிஸ்திரேட் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், தாயினதும், குழந்தையினதும் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


No comments

Powered by Blogger.