Header Ads



பேஸ்புக்கில் இஸ்லாம் அவமதிப்பு - பங்களாதேஷில் புத்த விகாரைகளுக்கு தீவைப்பு


வங்காள தேசத்தில் புத்த மதத்தை சேர்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பேஸ்புக் இணையதளத்தில் போட்டோவை வெளியிட்டததை அடுத்து அங்குள்ள முஸ்லீம்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இதை தொடர்ந்து தென் கிழக்கு வங்காள தேசத்தில் துறைமுக நகரமான சிட்ட காங் அருகேயுள்ள ராமு என்ற நகரில் நள்ளிரவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். 

அங்கிருந்து பேரணியாக சென்று, அப்பகுதியில் உள்ள புத்தர் கோவில்களில் புகுந்து அடித்து நொறுக்கினார்கள். பின்னர் அங்கு தீ வைத்தனர். இச்சம்பவங்களில் 11 கோவில்கள் தீயில் எரிந்து நாசமாயின. 

மேலும், புத்த மதத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டன. கும்பல் தாக்க வருவதை அறிந்ததும் வீடுகளில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

இந்த கலவரம் பல மணி நேரம் நடந்தது. எனவே போலீசாரால் கலவரக்காரர்களை அடக்க முடிய வில்லை. அதை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு தான் நிலைமை கட்டுக்குள் அடங்கியது. தகவல் அறிந்ததும் உள்துறை மந்திரி மகியுதின் கான் ஆலம்கீர் சம்பவம் நடந்த பகுதிகளுக்கு நேரில் சென்றார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தர விட்டார். 

இதற்கிடையே, புத்த மதத்தை சேந்தவர்கள் சிட்டகாங் நகரில் மனித சங்கிலி போரட்டம் நடத்தினார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என வங்காளதேச புத்த மத சங்க தலைவர் அனித் ரஞ்சன் பரூபா தெரிவித்துள்ளார்.



4 comments:

  1. முஸ்லிம்கள் என்றால் மூளை இல்லாதவர்கள், முரடர்கள், கொலைகாரர்கள் என்ற பிரச்சாரத்திட்கு எண்ணெய் ஊற்றும் ஒரு மோசமான சம்பவம் இது.

    இலங்கையில் உள்ள இனவாதிகளின் வாய்களுக்கு அவல் கிடைத்தது போன்று ஆகப் போகின்றது. இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு புத்துயிர் அளிக்கும் ஒரு நிகழ்வாக இது அமையும்.
    எரிக்கப் பட்ட விகாரைகளினதும், தாக்கப் பட்ட புத்தர் சிலைகளினதும் புகைப்படங்கள், பெளத்தர்களின் வெறியைத் தூண்ட தாராளமாகப் பயன்படுத்தப் படப் போகின்றன.




    ஒரு குறிப்பிட்ட நபர் தவறு செய்தால், அவரை சட்டப்படி தண்டிக்க வேண்டும். குற்றம் சாட்டப் பட்டுள்ள நபர், தான் மேற்படி புகைப்படத்தை பகிரவில்லை எனவும், அது தனக்கு வேறொருவரால் Tag செய்யப் பட்டது என்று தெரிவித்து உள்ளார்.

    இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறி இப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடும் வங்காள தேசத்தவர்கள், தமது நாட்டில் விபச்சாரத்திட்கு சட்ட அனுமதி கொடுத்து இஸ்லாத்தை அவமதிக்கின்றார்களே, அதற்காக என் கொதித்து எழக் கூடாது?

    ReplyDelete
  2. ISLAMIYA ADIPPADAYKKU WILUMINKALUKKU MUTTRILUM MAATTRAMAANA INTHA MADAMAITTHANAMAANA SEYALIN KAARAMAAKA THOOYA ISLAAM PATRIYA ENNAKKARUTTHUKKAL THAWARAAKA ADAYAALA PPADUTTHAPPADUWATHARKKU THOOPAMIDAPPADDULLATHU.SAKOOTHARAR LA VOIX AWARKALUKKU NANRIKAL.

    ReplyDelete
  3. இந்த இழி செயலை கண்டித்து ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் குரல்கொடுக்க வேண்டும் முஸ்லிம் சிவில் அமைப்புகள் இது குறித்த தமது கடும் கண்டனங்களையும் ஆட்சேபனைகளையும் வங்களாதேஷ் தூதரகத்திட்கு எழுத்து மூலம் தெறியபடுத்தவேண்டும் இப்படியான அநியாயங்களுக்கு எதிராகவும் நாம் வீதியில் இறங்குவதன் மூலம் எமது கண்டனங்களை தெறிவிப்பதன் மூலம் நம் நாட்டில் நம்மை பற்றிய நல்ல மனபாங்கை பெரும்பான்மை இன மக்களிடம் வளர்க்க காரணமாக அமையும்

    ReplyDelete
  4. AS A MUSLIM WE SHOULD CONDOM SUCH EVIL ACT ITS AGAINST TEACHING OF ISLAM BUT THE SAME TIME WE ALSO CONDOM THE EVIL ACT OF BURMA BUDDHIST WHO KILLED THOUSAND OF INNOCENT MUSLIM AND DESTROYED THEIR HOMES AND MOSQUES.

    ReplyDelete

Powered by Blogger.