சந்திரனை விட 15 மடங்கு ஒளிரும் வால் நட்சத்திரம்
சந்திரனை விட 15 மடங்கு ஒளிரும் வால் நட்சத்திரத்தை பூமியில் இருந்து பார்க்க முடியும். ரஷியா விஞ்ஞானிகள் சர்வதேச சயின்டிபிக் ஆப்டிகல் நெட் வொர்க் டெலஸ்கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சூரியனின் மேற்பரப்பில் ஒரு வால் நட்சத்திரம் பாய்ந்து வருவதை பார்த்தனர். அது சந்திரனை விட 15 மடங்கு கூடுதலான ஒளியுடன் காணப்பட்டது. அதற்கு “இசான்” (ஐ.எஸ்.ஓ.என்.) என பெயரிட்டுள்ளனர்.
அந்த நட்சத்திரம் தற்போது 20 லட்சம் மைல் தூரத்தை படிப்படியாக கடந்து சூரிய மண்டலத்துக்குள் நுழைந்து ஊடுருவி வருகிறது. அது அடுத்த ஆண்டு (2013) நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது அதை பூமியின் வட துருவத்தில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் பார்க்க முடியும்.

Post a Comment