Header Ads



நேத்ரா அலைவரிசையில் ஹஜ்ஜுப் பெருநாள் விசேட ஒளிபரப்பு


(நஜ்முல் ஹுஸைன்)

ஹஜ்ஜுப் பெருநாள் தினமான இம்மாதம் 27-10-2012ம் திகதி ரூபவாஹினி நேத்ரா அலைவரிசையில் மாலை 3 மணி முதல் 6 மணிவரை விசேட நிகழ்ச்சிகள் பல ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் முஸ்லிம் நிகழ்ச்சி பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.கே.எம். யூனூஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மபாஹிர் மௌலானா, முபாரக் மொஹிதீன், அஸாரியா பேகம் ஆகியோர் இந் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகின்றனர்.

மபாஹிர் மௌலானா இயக்கித் தயாரித்த 'டொக்டர் மாப்பிள்ளை' சமூக நாடகம், ஹாஜா அலாவுதீனின் நெறியாள்கையில் ஓரங்க நாடகம், மௌலவி காத்தான்குடி பௌஸ், யாழ் அஸீம், எம்.எஸ்.எம்.ஜின்னா, என்.நஜ்முல் ஹுசைன் ஆகியோர் எழுதி கலைக்கமல் இசையமைப்பில், உபைதுல்லாஹ் மௌதூம், மொஹீனா பேகம், ஸமீரா ஹசன், கலைக்கமல் ஆகியோர் பாடும் இஸ்லாமிய கீதங்கள், மௌலவி அப்துல்லாஹ் மஃதூம் ஆலிம் அவர்களுடனான உரையாடல், புத்தளம் தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயம், மற்றும் ஸாஹிரா கல்லூரி ஆரம்பப் பிரிவு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நெய்னா முஹம்மத், மவ்னுதீன் ஆகியோரின் பாவா பாடல் என்பவற்றுடன் தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் பிரபல கவிஞர்களான கலாபூசணம் டாக்டர் தாஸிம் அகமது, கன்னல் கவி கிண்ணியா அமீர் அலி, எங்கள் தேசம் பஷீர் அலி ஆகியோர் கலந்து கொள்ளும் கவியரங்கமும் இடம்பெற உள்ளது.

மூன்று மணித்தியாலங்கள் தொடரும் இந் நிகழ்ச்சிகளை எஸ் ரபீக், எம்.அன்ஸஹான் ஆகியோர் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.

1 comment:

  1. இலங்கைஇஸ்லாமிய ஒலிபரப்பு நிகழ்ச்சியும் சரி வேறு எந்த இஸ்லாமிய ஒலிபரப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கே சத்தியத்தைசொல்ல இடமில்லை.தேவையற்ற நிகழ்ச்சிகளை ஓலி பரப்பி எதை சாதிக்க துடிக்கிறீர்கள். நாடகம்,கவிதை,
    மீலாது நபி,கொடியேற்றம் இன்னும் தைக்கா,தரீக்கா போன்ற பல குப்பை நிகழ்ச்சிகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி ஈமானையும்,இஸ்லாத்தையும் ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்.பத்தாம் பிறை மட்டும்தானா விசேசம்.அப்படி யார் சொன்னார்கள்.ஒன்று தொடக்கம் பத்துவரை நம்மால் எவ்வளவுக்கு எவ்வளவு நல் அமல்கள் செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டியது தானே.கவிதை பாடி மார்க்கத்தை புரிய வைக்கிற அளவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள்
    முட்டாள்கள் இல்லை.நல்ல நாள் பெரு நாள்களில் அல்லாஹ்வுக்கும்,நபிக்கும் உவப்பான வேலைகளை
    பாருங்கள்.மறுமைக்காவது உதவும்.கவிதைகளை அரசியல்,பாடசாலை மேடைகளில் பாடி பொட் கிளி பெறுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.