பட்டதாரி பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம்
(ஜே.எம். வஸீர்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பட்டதாரி பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பொருட்டு முதற்கட்டமாக பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துரை, இறக்காமம் போன்ற பிரதேச செயலகங்களுக்கான 222 பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் இன்று அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் நீல்.டி. அல்விஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் பயிலுனர் ஒருவருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதனையும் அருகில் அரச உயர் அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.


Post a Comment