திவிநெகும சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கால அவகாசம் கோருமா..?
எம்.வை.அமீர்சமுர்த்தி அதிகாரசபை, உடரட்ட அபிவிருத்தி அதிகாரசபை, தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபை என்பன இணைந்து திவிநெகும திணைக்களத்தை அமைக்க வழிசெய்யும் சட்டமூலம் பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது உயர் நீதி மன்றத்தின் அனுசரனயைப்பெற வேண்டிய தேவை ஏற்பட்டது பின்னர் உயர் நீதி மன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட போது இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்பு முறையை ஆராய்ந்த நீதிமன்றம், சகல மாகாணசபைகளினதும் அங்கீகாரம் கிடைத்த பின்னரே இதை நாடாளுமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என அறிவித்தது. இதன் பயனாக அரசாங்கம் அண்மையில் சில மாகாண சபைகளின் அனுமதியை பெற்றுள்ளது.
இந்த அடிப்படையில் அரசாங்கம் கிழக்கு மாகாண சபையின் அனுமதிக்காக இன்று இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்க உள்ளது தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் முழு மூச்சாக எதிர்க்கும் இந்த சட்டமூலத்தை மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்யும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரத்தை பறித்துச்செல்ல அனுமதிக்குமா என சர்வதேசம் விழிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆதம்லெவ்வை தவம் அவர்களிடம் தொடர்பு கொண்ட போது அவசர அவசரமாக கொண்டுவரப்படவுள்ள இந்த சட்டமுலத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கட்சி ஆராய்ந்து வருவதாகவும் தற்போது இடம்பெறவுள்ள கட்சி குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் சில நேரம் இந்த சட்டமூலம் தொடர்பில் கால அவகாசம் கோரப்படலாம் என்றும் தெரிவித்தார். இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் இந்த சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Post a Comment