Header Ads



சவூதி அரேபிய நீமன்றங்களில் பெண் வக்கீல்கள் வாதாடுவதற்கு அனுமதி


சவூதியில் அடுத்த மாதம் முதல் கோர்ட்டுகளில் பெண் வக்கீல்கள் வாதாட அனுமதியளிக்கப்பட உள்ளது. சவூதியில் அந்நாட்டு சட்டப்படி பெண்கள், கார் டிரைவிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது இவைகளில் மாற்றம் கொண்டுவரப்படுகின்றன. 

சவூதியில் கடந்த நான்கு நாட்களாக ஈத்-அல்-அதா என்ற மாநாடு நடந்து வருகிறது. இம்மாநாட்டில் பெண் வக்கீல்கள் கோர்ட்டுகளில் வாதாட அனுமதியளிக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து அடுத்த மாதம் முதல் பெண் வக்கீல்கள் கோர்ட்டுகளில் வாதாட அனுமதிக்கப்படுவர் எனவும், கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. எனவே நன்கு சட்டம் படித்து நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் வாதாட தடையில்லை எனவும் அந்நாட்டு சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.