Header Ads



வாலிபருடன் பேசிய பெண்ணுக்கு 60 சவுக்கடி - மாலியில் சம்பவம்


வாலிபருடன், தெருவில் நின்று பேசிய சிறுமிக்கு, மாலி நாட்டில், 60 சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டது.மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், உள்ள திம்புக்டு பகுதி, இஸ்லாமிய பழமைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, அன்னிய ஆண்களுடன் பெண்கள் பேசுவது குற்றமாக கருதப்படுகிறது.

இப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, வாலிபர் ஒருவருடன், அடிக்கடி தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட போலீசார், அந்த பெண்ணை நான்கு முறை, எச்சரித்து அனுப்பினர்.மீண்டும் அந்த பெண், அதே வாலிபருடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்ததால், உள்ளூர் பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டார். இந்த பெண்ணுக்கு, 60 சாட்டையடிகள் கொடுக்கும் படி, பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.இதையடுத்து, பொது மக்கள் முன்னிலையில் நேற்று, இந்த பெண்ணுக்கு, 60 சாட்டையடிகள் கொடுக்கப்பட்டன.



2 comments:

  1. நடந்த உண்மையான சம்பவத்தை, திரிபு செய்யாமல் இந்த செய்தி வெளிக் கொண்டு வந்துள்ளதா என்ற சந்தேகம் உள்ளது.

    மாலி நாட்டில் மேற்படி தண்டனையை வழங்கியவர்களுக்கு இஸ்லாத்துடன் உள்ள தொடர்பு, அவர்களின் இஸ்லாமிய அறிவு மட்டம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

    "காட்டுமிராண்டித்தனம்" என்று கருத்துக் கூற முன்னர், இந்தச் செய்தியிலேயே இடம்பெற்றுள்ள சில விடயங்களை உற்று நோக்குவதே சிறந்தது.

    மேற்படி பெண்ணுக்கு 15 வயது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இஸ்லாத்தின் பார்வையில் பருவமடைந்த பின்னர், சிறுவர், சிறுமி என்று கருத முடியாது. மேலும், இஸ்லாமிய சட்டப்படி, மஹ்ரம் அல்லாத ஆணுடன் வீதியில் தனியாக நின்று பேசுவது அனுமதிக்கப் பட்ட ஒன்றல்ல. (மேற்படி வாலிபன், குறித்த பெண்ணுக்கு மஹ்ரம் உறவுக் காரனா என்பது குறிப்பிடப் பட்டிருக்கவில்லை.)

    இது தவிர, மேற்படி பெண்ணை போலீசார் நான்கு தடவை எச்சரித்து அனுப்பினர் என்னும் பொழுது, நான்கு தடவையும் அதனை உதாசீனம் செய்துள்ளமை குறித்து அறிய முடிகின்றது.

    எனினும், 60 சவுக்கடி வழங்கப்பட்டமை குறித்து, இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் குறித்த அறிவில்லாமல் விமர்சிக்க முடியாது.
    தண்டனை தவறாகவும் இருக்கலாம், எனினும் தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.


    எது எவ்வாறெனினும், சம்மந்தப்பட்ட வாலிபர் தண்டிக்கப்பட்டமை அல்லது தண்டிக்கப் படாமை குறித்து ஒன்றும் செய்தியில் இடம் பெற்றிருக்கவில்லை.

    பெரும்பாலும், நடக்கும் ஒரு சம்பவத்தை, மேற்கத்தைய ஊடகங்கள் விகாரப் படுத்தியே செய்தி வெளியிடுகின்றன என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.