சுவிற்சர்லாந்தில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியலாம் - பாராளுமன்றம் அங்கீகாரம்
சுவிற்சர்லாந்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் பள்ளிவாசல்களில் மினாரத் கட்டுவதற்கு பகிரங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதிக்கும் சட்டம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதிக்கும் சட்டம் குறித்து பொதுவாக்கெடுப்பு நிகழ்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே ஆர்காவ் மாநிலத்தில் (கண்டோன்) முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக நாடாளுமன்ற மேலவையில் நேற்று ஆதரவு வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பர்தாவுக்குத் தடை விதிக்க வேண்டாம் என்று 93 பேரில் 87 பேர் கருதியதால் தடை நீக்கப்பட்டது.
மைய வலது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹ்யூக்ஸ் ஹில்ட்போல்ட், பர்தாவுக்குத் தடை விதித்தால் முஸ்லீம் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவிட்சர்லாந்துக்கு வரும் ஆர்வம் குறைந்துவிடும். நமது நாட்டில் அப்பெண்கள் பர்தா அணிவதால் அன்றாட வாழ்வில் பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. மேலும் இங்கு வெகு சிலரே பர்தா அணிகின்றனர். புர்காவுக்குத் தடை விதிப்பது முஸ்லீம்களிடம் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதாலும் இந்தத் தடை வேண்டாம் என்றார்.

Post a Comment