Header Ads



அரசாங்கத்திற்கு ரணில் விக்கிரமசிங்க காலக்கெடு விதிப்பு


நிவாரண வழங்கல் தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி வரையில் காலக்கெடு விதித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.  

எதிர்வரும் 8ம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் நிவாரணங்களை வழங்காதபட்சத்தில், அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பாதையில் இறங்கி போராட்டம் நடத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சரத் பொன்சேகாவும் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவருடனும் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு சிறந்த விதைப் பொருட்கள் மற்றும் பசளைகளை வழங்குதல், மற்றும் நிவாரணம் வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படுதல் போன்ற விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இதற்கு அரசாங்கத்துக்கு நொவம்பர் மாதம் 8ம் திகதி வரையில் காலக்கெடு விதிப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. இந்தபாருடா, ரணிலுக்கும் இப்போது துணிச்சல் வந்துட்டுது டோய்.

    ReplyDelete
  2. இதையாவது உருப்படியாக செய்து, நாட்டில் பலமான எதிரணி உள்ளது என்று நிரூபிப்பார்களா?

    ReplyDelete
  3. "" சொல்லவேண்டாம் செய்து காட்டுங்கள் "" எப்போதும் காலக்கெடு விதிப்பதில்தான் உங்கள் காலம் கழிகின்றது . உங்கள் கட்சியில் இருந்து இன்னும் எத்தனை மந்திரிமார் .... ஆளும்கட்சிக்கு பாய உள்ளனர் என்பதையும் அடிக்கடி பார்த்துக்கொள்ளுங்கள். கடைசியில் நீங்களும் உங்களுடன் உள்ள பல்லுப்போன கிளடுக்களும்தன் மீதியாக இருப்பீர்கள்
    ஜாக்கிரதை மிஸ்டர் ரணில் அவர்களே

    ReplyDelete

Powered by Blogger.