தலிபான்களின் தலையை கொண்டு சென்றால் ஒரு மில்லியன் டொலர்
பாகிஸ்தானில் பள்ளி மாணவியை சுட்ட தலிபான்களின தலைக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையினை அந்நாட்டு அமைச்சர் அறிவித்தள்ளார்.
பாகிஸ்தானின், ஸ்வாட் மாவட்டத்தின், மிங்கோரா நகரை சேர்ந்தவர் தன்னார்வலர், மலாலா யூசுப்சாய், 14. பள்ளி மாணவியான மலாலாவை, கடந்த வாரம் தலிபான்கள் இரண்டு முறை சுட்டனர். இதில், தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த காயமடைந்த மலாலா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது தலிபான்களால் சுடப்பட்ட, பள்ளி மாணவிக்கு, லண்டனில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
மலாலாவை சுட்ட தலிபான்கள் தலைக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையினை பாக். அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், தனியார் சானலுக்கு அளித்த பேட்டியில், தக்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவரின் உத்தரவின் பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவருக்கும், மலாலாவை சுட்ட தலிபான்களின் தலைக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றார்.

Post a Comment