Header Ads



இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது


இஸ்ரேல் பார்லிமென்ட் நேற்றிரவு கலைக்கப்பட்டது. பொதுத்தேர்தல் வரும் ஜனவரி 22ம் தேதி நடக்கவுள்ளது. இஸ்ரேல் பார்லிமென்ட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், கூட்டணிக்கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பார்லிமென்ட்டை கலைக்க அவர் முடிவு செய்ததையடுத்து, நேற்றிரவு பார்லி., சிறப்பு கூட்டம் நடந்தது. பின்னர் நடந்த ஓட்டெடுப்பில், பார்லி., கலைப்புக்கு ஆதரவாக 100 ஓட்டுகள் பதிவாகின. எதிர்த்து ஓட்டுகள் எதுவும் பதிவாக வில்லை. இதையடுத்து பார்லி., கலைப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொதுத்தேர்தல் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி நடக்கவுள்ளது. இதனிடையே, நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.