Header Ads



பௌத்த விகாரைகள் அழிப்புக்கு எதிரான முஸ்லிம்களின் கண்டனத்தை அரசு வரவேற்கிறது!


எம்.ஜே.எம். தாஜுதீன்

பௌத்த வணக்கஸ்தலங்கள் பங்களாதேஷில் அழிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில்  இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் இனிமேலும் அந்த நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாதென்றும் அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனை இலங்கை அரசாங்கம் வரவேற்கின்றது.

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு இன்று வியாழக்கிழமை முற்பகல் தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,

இச்சம்பவங்கள் தொடர்பாக அரசு விசேட கவனம் செலுத்தி வருகின்றது. இலங்கையில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த சிலர் இச்சம்பவத்தை ஒரு காரணமாகப் பயன்படுத்தலாம் என்பததையம் அரசு உணரந்துள்ளது.

எனினும் இச்சம்பவங்களைச் சாட்டாக வைத்து  இலங்கையில் இனக்கலவரங்கள் ஏற்படுத்துவதற்கு  எவருக்கும்  அரசாங்கம் இடமளிக்காது.

பொறுப்புள்ள அரசாங்கம் என்றவகையில் இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண நாம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்  என்றும் அமைச்சர் கூறினார்.

1 comment:

  1. பங்களாதேஷில் பௌத்த விகாரை இடிப்புக்கு (உயிர் பலி இல்லை) எதிராக குரல் கொடுக்க முஸ்லிம் அமைப்புக்கள் உள்ளன. மியன்மாரில் 26 ,000 + கொலைகளை கண்டிக்க ஒரு பௌத்தரும் இல்லை. இது தான் தர்மம், அகிம்சாவாதம், அன்பு, கருணை, மனித நேயம்.....

    ReplyDelete

Powered by Blogger.