லத்தீன் அமெரிக்க தலைவர்களை துரத்தும் புற்றுநோய்
கொலம்பிய ஜனாதிபதி ஜுவான் மனுவல் சான்டெஸ் புற்றுநோய்க்காக சத்திரசிகிச்சை செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
எனினும் புற்றுநோய் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாகவும் நோயிலிருந்து முழுமையாக சுகம் பெறுவதற்கு 97 வீத வாய்ப்பு இருப்பதாகவும் 61 வயதான சான்டொஸ் குறிப்பிட்டார்.
கொலம்பியாவில் கடந்த அரை நூற்றாண்டாக போராடிவரும் பார்க் கிளர்ச்சியாளர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராகிவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பல லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களும் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக பிரேசில் நாட்டு ஜனாதிபதி டில்மா ரொசப், அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த லுவிஸ் இனாசியா லுலாடி சில்வா, வெனிசுவெலா தலைவர் ஹுகொ சாவெஸ், கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ, பெரகுவே முன்னாள் தலைவர் பெர்னாண்டோ லூகோ ஆகியோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இது அமெரிக்காவின் செயல் என ஹுகோ சாவெஸ் குற்றம் நாட்டியிருந்தார். tn

Ini sila Islaamiya naaduhalin thalaaivarhalukkum putru nooi varum...
ReplyDeleteஅமெரிக்காவுக்கு யாரையெல்லாம் பிடிக்கவில்லையோ அங்கெல்லாம் புதிய வைரசுகளும்,வசந்தங்களும்,போர்க்குற்றங்களும் இன்னும் அவர்கள் மனதுக்கு எது தோன்றுகிறதோ அதெல்லாம் செய்வார்கள்
ReplyDelete