துருக்கி, சவூதிஅரேபியா, கட்டார் ஆகிய நாடுகள் பங்கரவாதத்திற்கு துணை - சிரியா குற்றச்சாட்டு
tn
சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சிக் குழுக்களை ஊக்குவித்து பல நாடுகளும் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக சிரிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
சிரிய வெளியுறவு அமைச்சர் வலித் முஅல்லம் ஐ. நா. பொதுச்சபையில் உரையாற்றும் போது அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி, சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டினார். ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை பதவி விலகக் கோருவதும் சிரியா மீது நேரடியாக தலையிடும் செயல் என முஅல்லம் குறிப்பிட்டார்.
எனினும் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் பிராந்திய நாடுகளும் அமைதி செயற்பாடுகளை மதிக்காமல் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாக பொதுச்சபை உரையில் சிரிய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment