யாழ்ப்பாண மக்களின் கல்வி பின்னடைவிற்கு காரணம் என்ன..?
முன்னைய காலங்களில் இலங்கையின் கல்வியில் முதலிடமாய் திகழ்ந்த யாழ்ப்பாணம் இன்று கல்வியில் பின்னோக்கி உள்ளது. அதே போல் பாலியல் குற்றங்களுக்கு மிகவும் பெயர் போயுள்ளது. பயங்கர வாதப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பலத்த அழிவுகளைக்கண்ட யாழ்மக்கள் தற்போது அதில் இருந்து மீண்டு இலங்கையில் உள்ள சகல பாகங்களுக்கும் சென்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யகூடிய வகையில் தற்போது காலம் கனிந்துவிட்டது.
யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளின் தாற்பரியம் அவர்களின் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை. இதனால் அவர்கள் மனதளவில் இன்னும் மீட்சி பெறாதவர்களாக இருக்கின்றார்கள். யுத்தத்தினால் வெற்றிகண்ட அரசாங்கம் தபோது யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்ற சகல மக்களுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொழ்கின்றது. ஆனால் அதையும் தாண்டி அவர்கள் மனதினையும் அபிவிருத்தி செய்யவேண்டும். இதற்காக ஒவ்வொரு யாழ்மக்களுக்கும் (psychological counseling) உளவியல் அலோசனயினை இலவசமாக வழங்கி அவர்கள் ஒவ்வொருவர் மனதினையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் தபோது அங்குள்ள அநேகமான மக்களின் மனோ நிலை நோக்கும் பொழுது அவர்கள் முன்னைய காலப்பகுதியில் வெளி மாவட்ட மக்களோடு தொடர்பு அற்றவர்களாக இருந்தார்கள் யுத்தத்தின் பின் உருவான சூழ்நிலையில் அங்கு சுற்றுலா என்றும், வியாபார நோக்கங்கள் என்றும், கல்வி நடவடிக்கைகள் போன்ற விடயங்களுக்காக வெளி மாவட்ட மாகான பல்லின சமூகத்தொடர்புகள் அங்கு ஏற்பட்டுள்ளது. இவ்வார சூழ்நிலையில் யாழ் மக்கள் வெளி மாவட்ட மாகாணத்தில் இருந்து வருபவர்களுடன் நெரிங்கிப்பழகக் கூடிய மனோ நிலை அற்றவர்களாக காணப்படுகின்றனர். இன்னும் இதனை தெழிவாக விவரிக்கப்போனால் மட்டக்களப்பிலிருந்து செல்கின்ற இந்து சமூகத்தைச் செர்ந்தவர்களைக்கூட யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சில இந்து மக்கள் அவர்கள் தாங்களுடைய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல் வேற்றூர்காரர்கள் என்று ஒதுக்கி வைத்து பழகும் நிலைக்கு அவர்களின் மனோ நிலையினை கடந்த யுத்தம் பாதித்திருக்கின்றது.
எனவே அங்கு செல்கின்ற இலங்கையில் உள்ள வேறு இனத்தைச் சேர்ந்தவர்களை எந்த அளவிற்கு ஒற்றுமையாய் சேர்த்துப்பிடிப்பார்கள் என்று ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இது யாழ் மக்களின் குறைபாடு அல்ல மாறாக அவர்களுக்கு யாழ்ப்பாணம் தான் தாய் நாடு எமக்கும் வெளி இலங்கைக்கும் எமக்கும் தொடர்பு கிடையாது என்று ஊட்டப்பட்ட புத்துனர்ச்சியேதான் காரணம்.
தற்போது கல்வியில் யாழ்மாவட்டைத் தவிர வேறு மாவட்டங்களில் உள்ள மாணாக்கர்கள் சிறந்த தேர்ச்சியினை காண்பித்து வரும் சந்தர்ப்பத்தில் யாழ் மாணாக்கர்கள் குற்றச்செயலில் தேர்ச்சியினை காட்டி வருகின்றனர். இதும் அவர்களின் பிழை அல்ல மாறாக யாழ்மாவட்டம் தவிர்ந்த ஏனைய இடங்களில் உள்ள மாணாக்கர்களின் சிறந்த கல்வி வெளிப்பாடானது அவர்களின் மனதில் வஞ்சகத் தன்மையை தோற்றிவித்து தாங்களால் எதுவும் முடியவில்லையே என்று ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு குற்றச்செயல்களுக்கு அவர்கள் தூண்டப் படுகின்றனர். கல்வியில் போட்டி இருக்க வேண்டும் ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. மாறாக தன்னை விட கெட்டித்தனமாக இருப்பவர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களிடம் தனக்கு முடியாதவற்றை கேட்டு கற்கின்ற மனப்பான்மை, கேட்பவர்களுக்கு சொல்லிக்கொடுக்கின்ற மனப்பான்மை என்பன அற்றுப்போய் உள்ளது
அங்குள்ள அநேக மாணவர்களின் மனோ நிலை, சிறந்த தேர்ச்சியினை காண்பிக்கும் மாணவர்கள் யாழ் மாவட்டம் அல்லாத வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாயின் அங்குள்ள மாணாக்கர்களின் நிலை இன்னும் வஞ்சகம் உள்ள நிலைக்கு தள்ளப்படுகின்றது.
இவ்வாறு யாழ்மக்களில் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு குரோத உணர்வும், வஞ்சக உணர்வையும், துவேச உணர்வையும் ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளது நடந்து முடிந்த யுத்தம். எனவே முடிந்தளவு ஒவ்வொருவருக்கும் தனித்தனியான (psychological counseling) உளவியல் அலோசனயினை வழங்கி அவர்களை செழுமைப் படுத்த வேண்டும்.
அதே போல் யாழ் மக்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக சிந்தித்து தாங்கள் மனங்களில் உள்ள வஞ்சகம், குரோதம், பொறாமை, துவேசாம் போன்ற அசுத்தங்களை மனதில் இருந்து அகற்றி கல்வியிலும் ஒற்றுமையிலும் அடுத்தவர்களை அரவணைப்பதிலும் முன்மாதிரியாக திகழ வேண்டும். இதற்காக மனதில் உள்ள அசுத்தங்கள் அகன்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். யாழ்மக்களின் மன அசுத்தங்களை நீக்குவதற்கு நாம் எல்லோரும் உதவ முன்வருவோமாக!

வட மாகாண தற்போது உள்ள நிலைமைகளுக்கு இந்திய அரசியல் கோமாளிகள்,புலன் பெயர் அரசு,TNA இவர்கள் முதல் காரணம்.
ReplyDeleteதாங்கள் இருப்பதை உலகுக்கு காட்ட இருக்கிற பிரச்சனைகளை பெரிதாக்கி சுய லாபம் அடைகிறார்கள்.அரசினால் மூவின மக்களுக்கும் பிரச்சனை இருக்கிறது.சகல விடயங்களையும்கொலை,கொள்ளை, போதை வியாபாரம்,காதலித்து பிள்ளை கொடுப்பதுஒட்டு மொத்தமாகாக துப்பாக்கி முனையில்புலிகள் வட,kilakku செய்ததால் வெளியே வரவில்லை,தெரியவில்லை.புலி அதரவு மக்களை தவிர மற்றவர்கள் மீது துவேசத்தை எண்ணெய் உதறி வளத்தவர்கள்
புலிகளும்,மேட்டுக்குடி தமிழர்களும்தான்.எல்லோரும் புலிப் புண்ணியத்தில் சுகபோக,ஆடம்பரத்தில் வெளி நாடுகளை
ஆக்கிரமித்து வட்டியில் கொழுத்திருக்கிறார்கள்.
தவம் எழுதியது போல் கவுன்சிலிங் கொடுப்பது காலத்தின் தேவை.