உங்கள் சம்பளம் எப்படி...?
எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், சக ஊழியரைவிட சற்று அதிகமாக சம்பளம் இருந்தால்தான் மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படுவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த ஆய்வில், நாம் பெறக்கூடிய சம்பளத்தால் மகிழ்ச்சி பெற்றாலும், சக ஊழியர்கள் சற்று அதிக சம்பளம் பெறும்போது, வேலை செய்யும் இடங்களில் மகிழ்ச்சியை இழக்க நேரிடுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் எஜுஏர்டு பெரேஸ் அசென்ஜோ நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவலை குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அசென்ஜோ கூறியதாவது: உறவினர்கள் அதிகமாக சம்பாதிக்கும்போது, அதைப் பார்த்து நமது சந்தோஷமும், வேலை பார்க்கும் இடங்களில் பணித்திறனும் குறைகிறது. இதற்காக அதிக நேரம் உழைத்து, அவர்களைவிட அதிகமாகவோ அல்லது இணையாகவோ சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இது சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் பொதுவான கருத்தாக உள்ளது. மேலும், சம்பள விஷயத்தில் மகிழ்ச்சியாக இல்லாத ஒருவரைவிட, மகிழ்ச்சியாக இருப்பவர் பணித்திறனில் ஆற்றலை அதிகமாக வெளிப்படுத்துகிறார் என்றார் அசென்ஜோ.

உங்களை விட கீழே உள்ளவர்களை பாருங்கள், ஏன் மேலே உள்ளவர்களை பார்கிறீர்கள் ...
ReplyDeleteஉங்களுக்கு எழுதப்பட்டதுதான் கிடைய்கும், ...
அல்லாஹ் தான் நாடியோரை பொருளாதாரத்தில் மேம்படுத்தியும், ஒரு சிலரை குறைத்தும் வைத்திருக்கிறான்.
ReplyDeleteஏனெனில் நாடுகளாக இருந்தாலும்,தனி மனிதர்களாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழத்தான்
இறைவன் நாடியிருக்கிறான்.நமக்கு கிடைப்பதைக் கொண்டு அல்ஹம்துலில்லாஹ் என்று வாழப் பழகிக்
கொண்டால் அதில் நிறைய நலவுகளை கண் முன்னே கண்டு கொள்ளலாம்