Header Ads



குணப்படுத்தலாமென இங்கிலாந்து வைத்தியர்கள் நம்பிக்கை


பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக போராடிய 14 வயது மாணவி மலாலா யூஷபாய் பள்ளியில் இருந்து திரும்பும் போது சுவாத் பள்ளத்தாக்கில் உள்ள மிங்கோராவில் துப்பாக்கியால் சுடப்பட்டாள். 

இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலிபான்கள் இவரை சுட்டனர். இவரது தலை, முதுகு மற்றும் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராவல்பிண்டியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

தலையில் பாய்ந்து இருந்த குண்டு ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. அதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக லண்டனுக்கு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அனுப்பப்பட்டார். 

பிர்மிங்காமில் உள்ள ராணி எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஸ்பத்திரி டைரக்டர் டாக்டர் டேவிட் ரோஸ்கர் தலைமையிலான டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. பலவித பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

பின்னர் டாக்டர் டேவிட் ரோஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அறித்தார். அப்போது, சிகிச்சைக்கு பின் மாணவி மலாலா பூரண குணமடைந்து பாகிஸ்தான் திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், துப்பாக்கி சூட்டில் சேதம் அடைந்த அவரது மண்டை ஓட்டின் எலும்புகள் சீரடைய நரம்பியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவர் கூறினார். 

1 comment:

  1. இன்ஷா அல்லாஹ் .பூரண குணமடைந்து இஸ்லாத்திற்கும்,பெற்றோர்களுக்கும்,தாய் நாட்டுக்கும் பெருமை சேர்க்க இறைவனைப் பிராத்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.