தலிபான்கள் ஊடகங்களை இலக்கு வைப்பார்களா...?
பாகிஸ்தானில் சுட்டுக்காயப்படுத்தப்பட்ட 14 வயது மாணவி குறித்து செய்திகளை பாகிஸ்தானில் உள்ள செய்தி நிறுவனங்கள் விரிவாகவும், உருக்கமாகவும் செய்தி வெளியிட்டு வருகின்றன. இது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளி மாணவிகளிடையே புதிய வேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
தலிபான்கள் மீதான அச்சம் நீங்கி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மலாலா விரைவில் குணமடைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இது தலிபான்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி மலாலாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களை தாக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான சிறப்பு உத்தரவை தலிபான்களின் தலைவர் ஹகிமுல்லா மசூத் பிறப்பித்துள்ளார். இந்த தகவலை பிபிசி உருது செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது,
தலிபான்களின் தலைவர் மசூத், அவரது உதவியாளர் நதீம் அப்பாஸ் என்கிற இன்டிகுவாவுடன் பேசிய டெலிபோன் உரையாடலை உளவுத்துறை ஒட்டு கேட்டது. அப்போது கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் மற்றும் சில நகரங்களில் உள்ள செய்தி நிறுவனங்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும்படி அறிவுறுத்தியது தெரியவந்தது என்றார்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனங்கள் மற்றும் டெலிவிஷன் நிறுவன உரிமையாளர்களுடன் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், உயர் போலீஸ் அதிகாரிகளும், 4 மாகாணங்களின் தலைமை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இதெல்லாம் இஸ்லாத்தைப் பற்றிய கெட்ட அபிப்பிராயத்தை வளர்க்க செய்யப்படும் முயற்சிகள், பிரச்சாரங்கள்.
ReplyDeleteநமக்குத்தான் பொறுக்குதில்லை.....
இது அல்லாஹ்வின் மார்க்கம், அனாலும் அல்லாஹ் பொறுமையாகத்தான் இருக்கின்றான்.
நாமேன் உணர்ச்சிவசப் பட்டு, இன்னும் அவப் பெயரை இஸ்லாத்திற்கு ஏற்படுத்த வேண்டும்?
பொறுமையற்ற மனிதன்.ஆனாலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.தலிபான்கள் முட்டாள்கள் அல்ல.ஒவ்வொரு அசைவிலும் மேற்கத்திய கைகள் உள்ளது.சத்தியம் வெல்லும்.
ReplyDelete