Header Ads



ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் படையினருக்கு எதிராக நடைபெறுவது 'புனிதப் போர்'



வெளிநாட்டுப் படையினருக்கு எதிரான போர் "புனிதப் போர்' என கருத்து தெரிவித்த இம்ரான் கானுக்கு ஆப்கன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

இதுகுறித்து ஆப்கன் நாடாளுமன்ற துணை செயலாளர் பர்ஹத் அஸிமி கூறுகையில், 

""பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கானின் கருத்து ஆப்கன் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. தலிபான் அமைப்பை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசைக் கேட்டுக் கொள்கிறோம்'' என்றார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக, ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு, இதுதொடர்பாக சில அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் அஸிமி தெரிவித்தார். 

தலிபான்களின் கொலைமுயற்சியில் படுகாயமடைந்த சிறுமியும் சமூக சேவகியுமான மலாலாவை பெஷாவர் நகரில் புதன்கிழமை நேரில் சந்தித்தார் இம்ரான்கான். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆப்கனில் வெளிநாட்டுப் படையினருக்கு எதிராக நடைபெறும் போர் "புனிதப் போர்' என்று வர்ணித்தார். மேலும், பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் உள்ள போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சொன்னதில் என்ன தவறைக் கண்டார் ஹர்சாய்.உண்மை எப்போதும் உறுத்தும் .

    ReplyDelete

Powered by Blogger.