Header Ads



பட்டதாரி பயிலுநர் நியமனத்தில் அநீதி - அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை..!


கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் ஆட்சிக்கதிரையில் அமருவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்திருந்த போதிலும் தமது ஆதரவாளர்கள் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி விசனம் தெரிவித்திருப்பதுடன், இந்நிலை தொடர்ந்தால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தமது நிலைப்பாட்டை மீள்பரிசீலீக்க தயாரெனவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து தமது கட்சி ஆதரவாளர்கள் தம்மிடம் முறைப்பாடுகளை செய்துவருதாக யாழ் முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டிய ஹசன் அலி மேலும் தெரிவித்ததாவது,,

கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்டுவரும் பட்டதாரி பயினுநர் நியமனத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் திட்டமிட்டு புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் நான் நேற்று வியாழக்கிழமை நேரடியாக தொடர்புகொண்டேன். முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களான தகுதியுள்ள பட்டதாரிகளுக்கும் நியாயமான முறையில் நியமனம் வழங்குமாறு நான் கோரினேன். இருப்பினும் இன்று வெள்ளிக்கிழமை அம்பறையில் வழங்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் எமக்கு எமாற்றமே மீதியாக கிடைத்தது. அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் பொருளாதார அமைச்சின் கீழேயே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கத்தின் பங்காளி கட்சிதான். இருந்தபோதும் முஸ்லிம் காங்கிரஸ் பங்காளி கட்சி என்பதை மறந்துவிட்டே அரசாங்கம் தற்போது செயற்பட்டுவருகிறது. கிழக்கு மாகாணம் முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கமும், செல்வாக்கும் நிறைந்த பகுதி. இங்கு எமது ஆதரவாளர்கள் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுவதை ஏற்கமுடீயாது. உதாரணமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. இங்குகூட எமது ஆதரவாளர்கள் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர். தகுதியிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் என்ற காரணத்திற்காக நியமனங்கள் வழஙக்கபடவில்லை.

கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் ஆடசியமைப்பதற்கான பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் ஆடசியமைத்தவுடன் அந்த வாக்குறுதிகளை மீறிவருகிறது. அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை புறக்கணித்துவருவதை நாம் கண்டிக்கிறோம். அரசாங்கமும், அரசாங்கத்தின் அங்கமான முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை பழிவாங்குவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

திவிநெகுமே சட்டமூலத்தை கிழக்கு மாகாண சபையில் எமது கால அவகாசம் வழங்காது நிறைவேற்றிக்கொண்ட அரசாங்கம், பட்டதாரி பயிலுனர் நியமனத்திலும் தவறிழைத்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸுக்கு இவ்வாறு அரசாங்கம் தொடர்ந்து அநீதியிழைத்துக் கொண்டிருக்கும்போது எதற்காக முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென எமது ஆதரவாளர்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். எமது ஆதரவாளர்களின் நியாயமான ஆத்திரத்தை புரிந்துகொள்கிறோம். முஸ்லிம் காங்கிரஸுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் அநீதியிழைக்கும் படலம் தொடர்ந்தால் அரசாங்கத்திற்கான எமது ஆதரவு குறித்து பரிசீலிப்பதை தவிர முஸ்லிம் காங்கிரஸுக்கு மாற்று வழிகள் கிடையாதெனவும் இதன்போது ஹசன் அலி மேலும் கூறினார்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஹஸன் அலி ஐயா! உங்களுக்கு நன்றி ஆனாலும் இவ்வாறு கோரிக்கைகளை விடுவதை விட இதற்குறிய உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதோடு எதிர்காலத்தில் அட்டாளைச்சேனையில் வாக்கு வங்கி ஒன்று தேவை என்றால் உடனடியாக இதற்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

    குறிப்பு :- நீங்கள் வழமையாக ஏமாற்றும் பாமரமக்கள் இவர்களில்லை (பட்டம் பெற்ற பட்டதாரிகள்) என்பதை புறிந்து கொண்டு செயற்படுமாறு தயவாய் கேட்டுக் கொள்வதோடு

    நீங்களும் உமது கட்சியும் ஏனைய பகுதிகளில் இவர்களைப் போன்று பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என்பதுடன் அடுத்தடுத்த கட்டங்களில் ஒவ்வொரு அமைச்சின் கீழும் உள்வாங்கப்பட இருக்கின்ற
    நியமனங்கள் வழங்கப்படும் சந்தர்பங்களின் போதும் அனைத்து கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளையும் ஓரம்கட்டிவிட்டு பட்டதாரிகள் அனைவரும் சுதந்திமாகவும் தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் தங்களது சேவைகளை மக்களுக்கு சுதந்திமாக செய்வதற்கு உங்கள் ஆதரவை வழங்குவதோடு உங்கள் கட்சி போன்று ஏனைய கட்சியினரும் செயற்பட வழியமைக்க வேண்டும் என்பதுதான் பட்டதாரிகளுக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன் ஐயா.

    ReplyDelete

Powered by Blogger.