மட்டக்களப்பில் பட்டதாரி பயிலுணர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு (படங்கள்)
(அனா)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் பட்டதாரி பயிலுனர்களை ஆட்சேர்ப்தற்கான நிகழ்ச்சித் திட்டத்தில் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலனர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று (15.10.2012) ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளில் 32 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இரா நெடுஞ்செலியன், ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமிட், பிரதேச செயலாளர்களான எம்.சி.எம்.அன்சார், நிஹாரா மௌஜூத், உதவித்திட்டப் பணிப்பாளர்களான் எஸ்.ஏ.றியாஸ், எச்.எம்.எம்.றுவைத் ஆகியோரும் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.








Post a Comment