அம்பாறையில் யானைகளின் அட்டகாசம் (படங்கள் இணைப்பு)
(எம்.எம்.ஜபீர்)
அம்பாரை மாவட்டத்தில் நிலவும் அதிக வரட்சி காரணமாக காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து சேனைப் பயிர்கள் மற்றும் மக்களின் குடியிருப்புக்கள் என்பவற்றை நாசம் செய்து வருகின்றன.
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 6ஆம் கிராமம், சொறிக்கல்முனை, வீராத்திடல், 4ஆம் கிராமம், 5ஆம் கிராமம் கிராமத்திற்குள் மாலை 6 மணிக்குப் பின்னர் புகுந்த யானைகள் வெள்ளரி, சோளம், மரவள்ளி, கீரை, கரும்பு போன்ற சிறு பயிர்களையும், மாமரம், தென்னைமரம், பலாமரம், முந்திரிகை போன்ற பல்லாண்டு பயிர்களையும் குடியிருப்புக்களையும் நாசம் செய்வதால் மக்கள் வீசனமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக பிரதேச மக்கள் இரவு வேளைகளில் பாதுகாப்பான இடங்களிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பிரதேசத்தை நாவிதன்வெளி பிரதேச சபை எதிர் அணித்தலைவரும் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.தஜாப்தீன்இ நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.






Post a Comment