Header Ads



ஹஜ் குர்பான் தொடர்பில் பொலிஸாரின் சுற்றுநிருபம்


குர்பான் கடமைக்காக மாடு, ஆடுகளை ஏற்றிச்செல்வது தொடர்பில் பொலிஸார் சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த சுற்றுநிருபத்தில் குர்பான் கடமைக்காக மாடு,ஆடுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் அதற்கான சட்டரீதியான ஆவணங்கள் இருப்பின் தாமதங்களை ஏற்படுத்தாது, வீதித் தடைகளிலிருந்து அவற்றை விடுவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

ஹஜ் குர்பான் தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதிவரை இந்த விதி அமுலில் இருக்குமெனவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சர் காமினி நவரட்ணா தனது கையொப்பத்துடன் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஹலோ முஸ்லீம் மாட்டு வியாபாரிகளே இந்த நாட்களில் உங்கள் கள்ள மாட்டு வியாபாரத்தை இதிலும் கட்டாமல் முஸ்லீம் உம்மாக்களின் பெயர் கெடாமல் அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.