பலஸ்தீனத்தை சுதந்திர தேசமாக அங்கீகரியுங்கள் - இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது
unபலஸ்தீனத்தை புதிய சுதந்திர தேசமாக அங்கீகரிக்க வேண்டுமென உலக நாடுகளிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. ஐநா பொதுச் சபையின் 67வது கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
காலம் கடத்தாது பலஸ்தீனத்தை உலக நாடுகள் புதிய சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். இதன் மூலம் பலஸ்தீனத்தின் அவலங்களுக்கு உலக நாட்டுத் தலைவர்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமெனவும் அந்த நாட்டின் மக்களின் உரிமைகளுக்காக இலங்கை தொடர்ந்தும் குரல் கொடுக்குமெனவும் பாலித கொஹண குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment