2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் - நாளை முதல் பார்வையிடலாம்
2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலில் சேர்க்கப்பட்டோர் மற்றும் நீக்கப்பட்டோர் விவரங்கள் நாளை வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் பர்வைக்காக வைக்கப்படவுள்ளன.
இந்தப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் கிராம சேவையாளர் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ மாவட்ட செயலக தேர்தல் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதத்திலிருந்து நடைபெற்று வருகின்றது. இந்த வருடம் டிசெம்பர் மாத இறுதியில் புதிய வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடப்படமாட்டாது. அதற்கு அமைய முதல் கட்டமாகச் சேர்க்கப்பட்டோர் மற்றும் நீக்கப்பட்டோர் பெயர்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலிருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் ""ஏ'' பட்டியலிலும், புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் விவரங்கள்""பி'' பட்டியலிலும் நாளை வியாழன் முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளன.
பிரதேச செயலகம், கிராம சேவையாளர் அலுவலகம், பிரதேச சபை என்பனவற்றில் இவை நாளை முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவற்றில் வாக்காளராவதற்கு தகுதியுடைய வர்களின் பெயர் இடம்பெறாவிட்டால் கிராம சேவையாளர் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ மாவட்ட செயலக திணைக்களத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
மேலும் "ஏ'', ""பி'' பட்டியலில் தொடர்பிலான முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை கிராமசேவையாளர் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ மேற்கொள்ளலாம் என்றார்.

Post a Comment