அரபு நாடுகளில் யாழ் முஸ்லிம் இணையத்தின் செல்வாக்கும், பங்களிப்பும்..!
(மக்காவிலிருந்து ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி))
யாழ் முஸ்லிம் இனையம் தனது இரண்டாவது வருட பூர்த்தியினை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துச் செய்தியாக இச்சிறு கட்டுரையினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இலங்கை முஸ்லிம்களிடம் அன்மைய காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்ச்சியும் கல்வியில் காட்டுகின்ற அக்கரையும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. இதிலே குறித்துக் காட்டவேண்டிய விடயம் யாதெனில் கடல் கடந்து வாழ்கின்ற இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் அன்றாட விடயங்களை அறிந்து கொள்வதில் மிகவும் சிரத்தை காண்பிக்கின்றனர் என்பது ஒருவர் மற்றவருக்கிடையில் பரிமாறுகின்ற தகவல்கள் மூலம் மிக தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
யாழ் முஸ்லிம் இனையம் தொடர்பாக அதன் வாசகர் வட்டம் வைத்துள்ள நம்பிக்கையும் அதன் தரமான செய்திகளும் அதன் பால் பலரையும் ஈர்த்திருப்பதனை அதன துரித வளர்ச்சி எமக்கு காட்டுகின்றது. ஓரு பத்திரிகையை அதன் தர்மத்தை பேணி நடாத்துவது என்பது இலேசான ஒரு விடயமல்ல. வலையமைப்புகள் மூலம் இதனை இலேசாக நடத்தமுடியுமாயினும் செய்திகளை மக்களிடத்து சென்றடைய வைப்பதும் அதன் நம்பகத் தன்மையை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதும் கயிற்றில் நடப்பதற்கு ஒப்பானதாகும். அதன் முடிவு சாதனையாக அல்லது தோல்வியாக அமையாலாம்.
உண்மையில் வளையமைப்புக்கள் மூலம் ஏராளமான தகவல்களை பெறமுடியுமாயிருப்பினும் அவற்றின் நம்பகத்தண்மை மீது நம்பிக்கையற்றவர்களாகவே பெரும்பாலானவர்களது மனநிலை இருக்கின்றது.
அந்த வகையில் யாழ் முஸ்லிம் இனையம் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்ற இலங்கையரிடம் செலுத்தியிருக்கின்ற செல்வாக்கு பாராட்டத்தக்கதாகும். குறிப்பாக இலங்கையில் நடக்கின்ற அன்றாட செய்திகளை உடனுக்குடன் அறியக்கிடைப்பது எமக்கு மனமகிழ்ச்சியினை அளிக்கின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை உள்நாட்டிலே அறியப்படாதிருக்கின்ற போது மத்திய கிழக்கில் வாழ்கின்ற யாழ் முஸ்லிம் வாசகர் வட்டம் அவற்றை அறிந்துகொள்ள முடிகின்றமை யாழ் முஸ்லிம் இனையத்தின் மற்றுமொரு சாதனை என்றே கூறவேண்டும்.
இன்று காணப்படுகின்ற ஊடகங்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கத்திய, யூத ஊது குழலாக செயல்படுகின்றமையினை அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம் உம்மாவின் குரலாக பரிணமித்த அல்ஜஸீராவும் தற்போது அந்த பட்டியலில் சேர்ந்து விட்டதோ என்ற ஒரு கருத்து பொதுவாக எல்லோரிடத்திலும் காணப்படுகின்றது. அரபு நாட்டவர்களே பகிரங்கமாக விமர்சிக்கின்ற அளவிற்கு அதன் மீது மக்கள் நம்பிக்கையினை இழந்து விட்டடார்கள். அதன் அண்மைய செயற்பாடுகளும் இதனை உறுதிசெய்வதாகவே இருக்கின்றது.
இலங்கையில் இருக்கின்ற ஊடகங்களும் இதற்கு விதிவலக்கல்ல. இவைகள் தற்கால பௌத்தர்களை முஸ்லிம்களுக்கெதரான ஒரு போருக்கு வழுக்கட்டாயமாக அழைக்கின்ற ஒரு போக்குடனே செயல்படுவதனை அவதானிக்கலாம். இவைகள் தாராளமாக வளங்குகின்ற நச்சுக்கருத்துக்களையும் அதன் தாக்கங்களையும் எத்திவைப்பதற்கு யாழ் முஸ்லிம் இனையும் பெரும் பங்காற்றி வருவது பாராட்டுக்குறியதே.
ஒரு முஸ்லிம் தான் சார்ந்துள்ள இஸ்லாத்தின் வளர்ச்சியில் பங்காளியாக இருப்பது அவனது கடமையாகும். ஜிஹாத் என்றதும் எமக்கு ஞாபகம் வருவது இஸ்லாத்தின் எதிரிகளுடனான போர் தான். அந்தப் போரின் இறுதி இலக்கு இஸ்லாத்தின் இனிய வசந்தத்ததை இந்த உலகம் சுவாசிக்க வேண்டும் என்பது தான். ஒரு விவசாயி அவனது விவசயாத்தின் மூலம் அவனது சமூகத்திற்கு ஆற்றுகின்ற பாங்களிப்பு அவன் புரிகின்ற ஜிஹாதாக கணிக்கப்படும். ஒரு எழுத்தாளன் அவனது எழுத்தாற்றல் மூலம் அவனது ஜிஹாதினை செய்யமுடியும். அந்த வகையில் யாழ் முஸ்லிம் இனைய செயற்பாட்டு குழாம் தனது அறிவாற்றலையும் அனுபவத்தையும் பயண்படுத்தி இந்த சமூகத்திற்காற்றுகின்ற இப்பணி அவர்கள் புரிகின்ற ஜிஹாதாகவே கருதலாம்.
எனவே யாழ் முஸ்லிம் இனையம் இலங்கையிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் செலுத்தியிருக்கின்ற செல்வாக்கும் சிந்தனைப் புரட்சியும் முஸ்லிம்களை இஸ்லாத்தின் ஒளியில் சிந்திக்க வைத்திருக்கின்றது. அதுபோன்றே இலங்கை முஸ்லிம்களை சூழ படந்திருக்கும் அபாய மேகங்களை கலைவதில் எவ்வாரான ஒரு பங்களிப்பபை ஒரு முஸ்லிம் வழங்களாம் என்ற வினாக்கு விடைதேட வேண்டும் என்ற கடமையையும் உணர்த்தியிருக்கிறது. இதனை வேறுவகையில் கூறுவதாயின் உறங்கிக் கிடந்த முஸ்லிம்களை தட்டியெழுப்பியிருக்கிறது என்றும் கூறலாம்.
யாழ் முஸ்லிம் இனையம் கடைபிடிக்கின்ற சில பத்திரிக்கா தர்மங்களை இந்த இடத்தில் ஞாபகப்படுத்தாமல் இருக்கமுடியாது. தான் பிரசுரித்த கட்டுரைக்கு மறுப்பு கட்டுரையினை அனுப்பிவைக்கப்பட்டால் மறுப்பு கட்டரையுடன் சேர்த்து குறித்த கட்டுரையின் தேடலை (டுiமெ) யும் இனைத்தே பிரசுரிப்பது பாராட்டிற்குறியதே. அத்தோடு வேறெந்த இனையங்களையும் பிரதி பன்னாமல் தனக்கென ஒரு தனி பாணியினை அமைத்து செயல்படுவது அதன் பக்க வடிவமைப்பாளரின் திறமையினை பரைசாட்டுகின்றது. யாழ் முஸ்லிம் இனையம் என்ற பெயருடன் வெளிவந்தாலும் இலங்கை முஸ்லிம்களுக்கு பொதுவான ஒரு இனையமாக செயல்படுவதும் பாராட்டிற்குறியதே.
யாழ் முஸ்லிம் இனையம் சந்திக்க வேண்டிய பல சவால்கள் எதிர்காலத்தில் இருக்கலாம். குறிப்பாக இன்று இலங்கையில் கடைபிடிக்கப்படுகின்ற ஊடகக் கொள்கையின் வலைக்குள் சிக்குகின்ற நிலைக்கு தல்லப்படவும் கூடும். அல்லாஹ் காப்பற்ற வேண்டும். ஒரு ஊடகவியளாலனுக்கு சவால்கள் சாதாரணமாவை தான். இந்த சவால்களை முறியடிக்கின்ற விதத்தில் அதன் செயற்பாட்ட குழாம் ஆழமான அடித்தளத்தை இடவேண்டும். எமது எல்லா விடயங்களுக்கு முன்னால் எப்போதும் ஒரு சவால் இருப்பது எமக்கு புதிய சிந்தனையையும் உத்வேகத்தையும் அளிக்கும். எனவே யாழ் முஸ்லிம் இணையமும் தனக்கெதிரான சவால்களை சாதனைகளாக மாற்றும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
அந்த வகையில் நோக்கும் போது யாழ் முஸ்லிம் இனையத்தின் அண்மைய எழுச்சியும், செய்திகளை வெளியிடுகின்ற போக்கும் இலங்கையிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் மாத்திரமல்ல ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் அதன் செல்வாக்கை செலுத்திக் கொண்டேயிருக்கிறது என்பதனை அறிய முடிகின்றது. யாழ் முஸ்லிம் வாசகர்களுக்குள்ள ஒரு கடமையினையினையும் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்.
தற்கால இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களில் உண்ணிப்பாக கருமமாற்றுவதோடு மிக நிதானமாக தூர நோக்குடன் முன்னேற்பாடான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எமக்கிருக்கின்ற யாழ் முஸ்லிம் இனையத்தை மிக நல்ல முறையில் பாவிப்பதோடு அதன் அறிமுகத்தை எமது நன்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறியப்படுத்தி அதன் பாவனையாளர்களாக்கி அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
இறுதியாக இலங்கை முஸ்லிம்களிடத்து அரசியல் வழிப்புணர்ச்சியையும் சமூகப்பற்றினையும் ஏற்படுத்த உழைக்கின்ற யாழ் முஸ்லிம் இணையத்திற்கு வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அதன் சேவை தொடரவும் தடங்கள்கள் அகன்று முன்னோக்கிச் செல்லவும் பிரார்த்திக்கின்றேன்.

Post a Comment