Header Ads



நோபல் பரிசுக்கு போட்டியாக 'முஹம்மமு நபி' பெயரில் விருதுகள் - ஈரான் அறிவிப்பு


நோபல் பரிசுக்கு இணையாக, முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்காக மட்டும் புதிய தி கிரேட் ப்ரொஃபெட் வெர்ல்ட் விருது பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.

நபிகள் நாயகம் பெயரில், தி கிரேட் ப்ரொஃபெட் வெர்ல்ட் விருது' 2 ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் என்று ஈரான் அறிவியல் தொழில்நுட்பத் துறை துணை அதிபர் நஸ்ரின் சுல்தான்கா அறிவித்துள்ளார்.

இந்த விருது 3 தொழில்நுட்ப துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்று  நஸ்ரின் சுல்தான்கா அறிவித்துள்ளார்.

சர்வதேச நோபல் விருது கடந்த 1901ம் ஆண்டு முதல் நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்த பரிசு வழங்கப்பட்டு வந்தாலும், ஈரானை சேர்ந்த ஒரே ஒரு விஞ்ஞானிக்கு மட்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஈரானில் மனித உரிமைக்காக போராடி வரும் ஷெரின் எபாடி என்ற பெண்ணுக்கு கடந்த 2003ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அறிவியல் துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஈரான், இந்த புதிய விருதை அறிவித்துள்ளது. inneram



No comments

Powered by Blogger.