யாழ்ப்பாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் - ஜின்னா மைதானத்தில் நினைவு நாள்
வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்
22ம் ஆண்டு நினைவு நாள்
30 ஒக்டோபர் 2012
கருப்பொருள்
* வடக்கு முஸ்லிம்களினதும் தாயகமே!
* வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
* வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் துரிதமடைய நாம் எல்லோரும் ஒத்துழைப்போம்!
யாழ் மண்ணில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவுகாணும் இவ்வேளையில், அவர்களது துரித மீள்குடியேற்றத்தையும் சகஜவாழ்வையும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் முஸ்லிம் புத்திஜீவிகள் பங்கெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: 30-10-2012 செவ்வாய்க்கிழமை
இடம்: யாழ் ஜின்னா மைதானம்
யாழ் மண்ணில் நேசம்கொண்டு வாழும் அனைத்து மக்களையும் அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றோம். யாழ் முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதிசெய்ய அணிதிரண்டு வாரீர் ஆதரவுக்கரம் தாரீர்
அழைப்பு: யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்

நல்லதொரு திட்டம். மேற்படி தினத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள நிகழ்வை, இதனை விடவும் பரந்த முறையில், அதிக மக்களை சென்றடையக் கூடியதாக, அதிக மக்கள் கலந்து கொள்ளக் கூடியதாக ஏற்பாடு செய்தால் நல்லது.
ReplyDeleteமீள்குடியேற்றத்தை ஊக்குவிக்கின்றோம் என்ற பெயரில், மீலாத் விழா கொண்டாடுவதனையும், வெள்ளைக் கடற்கரையில் கொடி ஏற்றுவதனையும் விட, ஆக்கபூர்வமாகச் சிந்தித்து, இப்படி ஒரு நாளை தெரிவு செய்து, செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது எவ்வளவோ மேல் என்றுதான் சொல்ல வேண்டும். அனைத்து யாழ் முஸ்லிம்களும் மேற்படி நிகழ்வில் முடிந்தவரை கலந்து கொள்ளவோ, இல்லாவிட்டால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கவோ முன்வர வேண்டும்.
mudintha warai anaithu jaffna muslimhalum kalanthu kondu aatharvu walanki ungal poorveehaththai venredukka waltukkal,
ReplyDeleteputtalam,mannar,katpitty alla ungal pirathesam-oru nal onraha sernthu urimaikkana kural kodunka............................
october-10-enathu aalntha anuthapangal.