தண்ணீரை வீணாக்காதீர்கள்..! (படம்)
(AD)
தண்ணீரைத் தேடி வந்த யானைகளில் ஒன்று இறந்துள்ள நிலையில் கண்டு பிடிக்கபட்ட அதேவேளை, மற்ற யானையொன்று சிகிச்சைக்காக வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சம்வங்கள் கருவலகஸ்வெவ மற்றும் கொட்டுக்கச்சி பிரதேசங்களில் இடம் பெற்றுள்ளன.
கருவஸ்கலவெவ எரமுதுகஸ்வெவ பிரதேசத்திலுள்ள வற்றிய குளத்தில் தண்ணீர் குடிக்க வந்த யானையொன்று இறந்துள்ளது. இறந்த யானையை கண்டு பிடித்த போது சில நாட்கள் கடந்து விட்டிருந்தன. இறந்த யானையின் உடல் பாகங்கள் மிருகங்களினால் உண்ணப்பட்ட நிலையில் காணப்பட்டிருந்தன.
அதே வேளை தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த யானையொன்று கொட்டுக்கச்சி பிரதேசத்தில் இயலாத நிலையில் விழுந்த கிடந்த போது, பொது மக்களினால் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த யானை அதிகாரிகளினால் அவசர சிகிச்சைக்குட்படுத்தபட்டது.

மூன்றாம் உலக யுத்தம் தண்ணீருக்காக என்று சொல்கிறார்கள்.அதை நினைத்தாவது தண்ணீரில் சிக்கனத்தை கடைப் பிடிப்போம்.
ReplyDelete