Header Ads



ஜனாதிபதி மஹிந்த பயணிக்கவிருந்த விமானத்தில் கோளாறு - உடனடி விசாரணைகள் ஆரம்பம்


(PP)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பயணம் செய்யவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று முன்தினம் மூன்று நாள் பயணமாக டுபாய்க்கு புறப்பட்டுச் சென்றார். அவர் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் டுபாய் செல்வதாக இருந்தது. 

ஆனால், அன்று பிற்பகல் 12.45 மணியளவில் விமானத்தை பரிசோதனை செய்த தொழில்நுட்பவியலாளர்கள் அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டறிந்தனர். விமானத்தின் ஒரு இறக்கையின் கீழ் உள்ள குளிரூட்டியை மாற்றவேண்டியிருந்தது. இதையடுத்து அதனை மாற்றுவதற்கு போதிய காலஅவகாசம் இல்லாததால் மாற்று விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதனால், திட்டமிட்டதை விட சுமார் ஒரு மணிநேரம் தாமதமாகவே மகிந்த  டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வெளிநாடு செல்லும் போது அவர் பயணம் மேற்கொள்ளும் விமானத்தை ஒரு நாள் முன்னதாகவே சோதனையிடுவது வழக்கம். 

ஆனால், நேற்றுமுன்தினம் அவர் புறப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னரே விமானம் சோதனையிடப்பட்டது. இந்தச் சம்பத்தை அடுத்து, சிறிலங்கன் எயர் லைன்ஸ் நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.