மலாலா மீதான துப்பாக்கி சூடு தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள்..!
மதத்துக்கு எதிரான கருத்துகளை பரப்பியதால்தான் மலாலாவை சுட்டோம். நாங்கள் செய்தது சரிதான் என்று தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த சிறுமி மலாலா யூசுப்சய் (14). பெண் கல்வி மற்றும் மனித உரிமைக்கு ஆதரவாகவும் தீவிரவாதத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தாள். தலிபான் எதிர்ப்பு தொடர்பாக இவள் எழுதிய கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளியானது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலாவை தலிபான்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
உயிருக்கு போராடிய அவளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. தண்டுவடம் அருகில் இருந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது. மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்ட அவளுக்கு தற்போது பர்மிங்ஹாம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலாலா உடல்நலம் தேறிவருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், மலாலா மீதான துப்பாக் கிச் சூட்டை நியாயப்படுத்தி தலிபான்கள் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: மேலை நாட்டின் உளவாளி போல மலாலா செயல்பட்டாள்.
புனித போர் நடத்தும் தலிபான்கள் மீது அவதூறு சொன்னாள். மதத்துக்கும் மதத்தை காப்பாற்றுபவர்களுக்கும் எதிராக யார் செயல்பட்டாலும், குழந்தையாகவே இருந்தாலும் அவர்கள் எங்களுக்கு எதிரிகள்தான். மதத்தின் பிரதான எதிரி அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோரின் ஆதரவுடன் செயல்பட்டதாலும் மத விரோத கருத்துகளை பரப்பியதாலும்தான் அவளை சுட்டோம். நாங்கள் செய்தது நியாயம்தான். இவ்வாறு தலிபான்கள் கூறியுள்ளனர். சிறுமிக்கு வீரதீர விருது அறிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, துப்பாக்கி சூடு நடத்தியகளின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மலாலா மீதான் துப்பாக்கிச் சூட்டுடன் அமெரிக்காவுக்கு தொடர்பிருப்பதாக மற்றும் சில தரப்புகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தலபான்கள் அமெரிக்க, சவுதி, பாகிஸ்தானிய கூட்டு தயாரிப்பு என்பதால் அமெரிக்க தொடர்பு மறுக்க முடியாததுதான்.
ReplyDelete1978 முதல் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை உற்று நோக்கினால், தலிபான்களின் வளர்ச்சி என்பது ஆச்சரியப் படத் தக்க ஒன்று மட்டுமல்ல, சாதாரணமாக சாத்தியப் படாத ஒன்றாகும்.
ReplyDeleteரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தில் எவ்வித தொடர்புமற்ற இவர்களால், உருவாகி வெறும் ஒன்றரை வருடங்களிலேயே முழு ஆப்கானின் ஆட்சியையும் கைப்பற்ற முடிகின்றதென்றால், உலக வல்லரசொன்றின் உறுதியான பின்புலம் இல்லாமல் இது எவ்வகையிலும் சாத்தியமில்லை என்பதனை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த காலத்தில், இஸ்லாத்தின் பெயரால் அவர்கள் செய்த அதிகமான செயல்பாடுகள், இஸ்லாத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததை
ஞாபகப் படுத்திக் பார்க்க முடியும்.
உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான இலங்கையின் இராணுவத்தால், பல்வேறு சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்த புலிப் பயங்கரவாதிகளை, முறையான யுத்தம் ஆரம்பித்து மூன்று வருடங்களுக்குள்ளாகவே இராணுவ ரீதியாக முற்றாக அழித்து ஒழிக்க முடிந்ததென்றால், உலகின் மிகப் பெரிய வல்லரசு என்று சொல்லப் படும் அமெரிக்காவால், 11 வருடங்களுக்கு மேலாகப் போராடியும் கூட தலிபான்களை அழிக்க முடியாமல் உள்ளது என்பது நம்பக் கூடிய ஒன்றாக இருக்கின்றதா?
மூத்த பத்திரிகையாளர் தாஹா முஸம்மில் அவர்களின் கருத்து சரியான ஒன்று என்றே சொல்ல வேண்டும்.
இஸ்லாத்தை அழிக்கும் நோக்கில் யூதர்களால் ஷீயாக்களும், பிரித்தானியர்களால் காதியானிகளும் உருவாக்கப் பட்ட வரலாற்றின் அடிப்படையில், அதே வழிமுறையைப் பின் பற்றி, வித்தியாசமான
தோற்றத்தில் அமெரிக்காவால் உருவாக்கப் பட்ட அமைப்புகளாக தலிபான்கள் மற்றும் அல் கைதா என்பன இருக்க வேண்டும். இவற்றின் செயல்பாடுகள், இஸ்லாத்தைப் பற்றிய பிழையான கருத்துக்கள் மக்களைச் சென்றடையவே துணை புரிகின்றன.