Header Ads



புத்தளத்தில் சிறுவர்களின் ஊர்வலம் (படங்கள் இணைப்பு)


அபூமுஸ்னா

இவ்வருடத்தின் உலக சிறுவர் தினத்தையொட்டி புத்தளம் “விழுதுகள்” ஆற்றல் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்த சிறுவர்களின் ஊர்வளம்  புத்தளத்தில் இடம்பெற்றது. புத்தளம் நகர மண்டபத்திலிருந்து ஆரம்பமான சிறுவர்களின் ஊர்வலம் புத்தளம் நகரின் ஊடாகச் சென்று புத்தளம் நகர சபை விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்து அங்கு சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 

இந்த ஊர்வளத்தில் நூற்றுக்கும் அதிகமான  மூன்று இனங்களையும் சேர்ந்த சிறுவர்கள் கலந்து கொண்டனர்.இதன் போது சிறுவர்கள் பல்வேறு பதாதைகளையும் ஏந்தியவாறு ஊர்வளத்தில் செல்வதையும், சிறுவர்களது கலை நிகழ்வுகளில் ஒரு பகுதியையும்  படங்களில் காணலாம்.








No comments

Powered by Blogger.