Header Ads



சிங்கள இனவாத சக்திகள் முஸ்லிம்களுக்கெதிரான நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யுமா?


அபு நிதால் 

இலங்கையில் முஸ்லிம்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்ற போதிலும் அண்மைக்காலங்களில் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஓர் அதிகரிப்பு காணப்படுகின்றது. இந்த முஸ்லிம் விரோத செயற்பாடுகளை அதிகமான சிங்களவர்கள் வெறுக்கின்ற போதிலும் முஸ்லிம்களின் பொருளாதாரத்திலும் வளர்;ச்சியிலும் பொறாமை கொண்ட ஒரு சிலர் அப்பாவியான மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் கருத்துக்களை கூறி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட வைக்கின்றனர். 

இவர்கள் இலங்கை சிங்களவர்களின் நாடு என்றும் இங்கு மரக்கலங்களில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு  வந்த முஸ்லிம்கள் பொருளாதாரங்களையும் சிங்களவர்களின் வருமானங்களையும் சுரண்டுகின்றனர் என்றும் சிங்களவர்களை மதம் மாத்துகின்றனர் போன்ற பல கருத்துக்களை முன்வைத்து முஸ்லிம் விரோத செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இந்த முஸ்லிம் விரோத கருத்துக்கள் கடந்த 1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற  சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தின் பிற்பாடு அதிகரித்து வந்துள்ளது. ஆனால் 1970களின் நடுப்பகுதியில் இருந்து இடம்பெற்ற தமிழர் ஆயதப் போராட்டம் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகள் மந்த கதியை அடைந்திருந்தன. 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாத அமைப்புகளின் செயற்பாடுகள் மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

இந்த தேச விரோத சக்திகள் முஸ்லிம்களை ஆயிரம் வருடங்கள் வரையான வரலாறுகளை கொண்டவர்கள் என்றும் சிங்களவரின் பொருளாதாரத்தை முஸ்லிம்கள் சுரண்டுகிறார்கள் என்றும் கூறிவருகின்றன. உண்மையில் இலங்கையின் சுதேசிகளாக 2500 வருடங்களுக்கு முன்னர் இயக்கரும் நாகரும் காணப்பட்டனர் என்பது சிங்கள தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்ட விடயம். இயக்கர் மகிந்த தேரர் மூலமாக பௌத்த மதத்தை 2300 வருடங்களுக்கு முன்னர் ஏற்றிருந்தனர். நாகர்களுக்க என்ன நடந்தது என்ற விபரங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகும். இந்த நாகர்கள் இனைவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் குறைவாகவே உள்ளன. மேலும் நபிமார்கள் அனுப்பப்படாத காலப்பகுதியில் வாழ்ந்து சொர்க்கம் செல்லக் கூடிய கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இந்த நாகர்கள் இருந்திருப்;பார்கள் என நினைக்கின்றேன். இதனால் சுலைமான் நபி இலங்கைக்கு விஜயம் செய்த முதல் கட்டத்தில் களனிப் பிரதேசத்தில் வாழ்ந்த நாகர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். சுலைமான நபியின் இரண்டாவது விஜயத்தின் போது இலங்கையின் வடக்கிலிருந்த நாகதீப பிரதேசத்தில் வாழ்ந்த நாகர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக முஹம்மது நபியவர்கள் மீளமைத்த இஸ்லாம் எனும் ஏக தெய்வக் கொள்கையை நாகர்கள்  ஏற்றுள்ளனர்.  அந்த வகையில் இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகளே.

முஸ்லிம்கள் சிங்களவர்களின் சொத்துக்களை  பொருளாதாரங்களை சூறையாடுகின்றனரா என்று பார்த்தால் அவ்வாறு இல்லை என்பது தான் உண்மை. இன்று இலங்கையில் முஸ்லிம்களால் நடாத்தப்படும்  பெரும் பெரும் ஆடைகள் தைக்கும் தொழிற்சாலைகள், தைத்த ஆடைகள் விற்கும் நிறுவனங்கள், சிறுகைத்தொழில்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் சிங்களவர்கள் பணி புரிகிறார்கள். அவ்வாறானவர்களின் குடும்பங்கள் முஸ்லிம் நிறுவனங்களிலிருந்து உழகை;கும் பணத்தில் தான் தங்கியிருக்கின்றன. முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் எந்த செயற்பாடும் முஸ்லிம்களில் தங்கி வாழும் சிங்களவர்களை பாதிக்கவே செய்யும். 

இன்று முஸ்லிம்கள் வீடுகள் கட்டும் போதும் சரி கடைகளை கட்டும் போதும் சரி எனைய எலக்ரிகள் மற்றும் குழாய் பொருத்தும் வேலைகளை செய்யும் போதும் சிங்களவர்களையே பெரும்பாலும் தொழிலுக்கு அமர்த்துகிறார்கள். முஸ்லிம்களின் பொருளதாரங்கள் அழிக்கப்பட்டால் இந்தத் துறைகளில் தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்லும் இலட்சக்கணக்கான சிங்களவர்கள் பாதிப்படைவார்கள். 

இன்று முஸ்லிம் நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாகவும் பல்வேறு துறைகளிலும் நான்கு இலட்சம் சிங்களவர்கள் வேலை செய்கின்றனர். அவர்களது வருமானமே இலங்கையை செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றியுள்ளது. ஆயதப்போராட்டம் சுனாமி ஆழிப் பேரலை என்று பல்வேறு அழிவுகளை சந்தித்த இலங்கையின்   பொருhதாரம் தொடர்ந்து வளர்ச்சிப்படியிலேயே இருப்பதற்கு காரணம் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் வேலைசெய்யும் இலங்கையர் தான் என்பது உணரப்பட வேண்டும். 
இன்று இலங்கையில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்களும் தினமும் மூன்று வேளை உணவுகள் உட்கொள்கின்றனர். உடைகளை உடுத்துகின்றனர். பாடசாலை உபகரணப் பொருட்கள் வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றை கடைகளில் வாங்குகிறார்கள். இவற்றில் விவசாயப் பொருட்கள் உட்பட எல்லாப் பொருட்களையும்  அதிகமாக நுகர்பவர்கள் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் பணம் சிங்களவர்களை சென்றடைகின்றது. இதனால் சிங்களவர்களின் பொருளாதாரம் முன்னேற்றமடைகின்றது. இங்கு முஸ்லிம்கள் சிங்களவர்களின் பொருளாதாரத்தை சுரண்டவில்லை. ஒரு சுழற்சியின் அடிப்படையில் சிங்களவர்களின் பொருளதாரத்தை முன்னேற்றுகின்றனர் என்பதை இனவாத சிந்தனை கொண்ட சிங்களவர்கள் உணர வேண்டும்.

இன்று முஸ்லிம்களின் பள்ளிகளை மூடுவதற்கும் அவர்களின் பொருளாதாரங்களை அழிப்பதற்கும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழர் ஆயுதப் போராட்டத்தின்  பொருளாதார அழிவுகளிலிருந்து மீள இலங்கைக்கு இன்றும் பத்து வருடங்கள் செல்லும் என பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு கிழக்கிலும் தெற்கில் சில பிரதேசங்களில் இடம்பெற்ற இந்த அழிவுகளின் தாக்கமே இந்த அளவுக்கு உள்ளதெனில் இலங்கையின் அனைத்து மாவட்ங்களிலும் வாழும் முஸ்லிம்களின் பொருளாதாரங்கள் அழிக்கப்பட்டால் சிங்களவர்களினதும் இலங்கையினதும் பொருளாதாரங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை ஊகித்துக் கொள்ள வேண்டும். 

இலங்கையில் முஸ்லிம்கள் அழிவுக்கு உட்படுத்தப்படும் போது அது இலங்கையுடன் மட்டும் முடிவடைந்து விடாது. முஸ்லிம்களை பொருத்தவரை எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் எல்லோரும் சகோதரர்கள் போன்றவர்கள். ஓருடலின் பாகங்கள் போன்றவர்கள். உலகின் எந்த மூலையில் முஸ்லிம் பாதிக்கப்பட்டாலும் உலகம் பூராகவுள்ள முஸ்லிம்கள கொதித்தெழுவார்கள். ஆப்கானிஸ்தானிலும் செசன்யாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் சென்று இறங்கியதால் அந்த நாடுகளில் ஜிஹாத்  போராட்டம் ஒரு புது வடிவைப் பெற்றது. அதே போன்று இலங்கையிலும் நிலமைகள் மோசமடையலாம். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் வேலை செய்யும் சிங்களவர்கள் முஸ்லிம்களின் இழகுவான இலக்குகளாக மாட்டிக் கொள்வார்கள். இதனால் இரு பக்கமும் பொருளாதார உயிரிழப்புகள் ஏற்பட்டு சொர்க்காபுரியான இலங்கை நரகாபுரியாக மாறிவிடும். மேலும் இலங்கைக்கு யுத்த காலங்களில் ஆயுதங்களை வழங்க மேற்கத்தைய நாடுகள்  மறுத்திருந்தன. ஆனால் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளும் முஸ்லிம்களை கொண்ட ஈரான் போன்ற நாடகளுமே உதவி வழங்கியிருந்தன். இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை பறிப்பதும் உடைப்பதும் இந்த நாடுகள் நமது நாட்டுக்கு வழங்கிய உதவிகளுக்குச் செய்;யும் துரோகத் தனமாகவே அது கருதப்படும். ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கெதிரான மனித உரிமை மீறல்கள குற்றச் சாட்டு விவகாரத்தில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தன. இந்த நிலமைகள் மாறும் போது இலங்கை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டி ஏற்படுவதுடன் இலங்கை மீது பொருளதார தடைகள் கொண்டுவரவும் சாத்தியமிருக்கின்றது. இதனால் இலங்கையருக்கே அழிவுகள். 

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இஸ்லாத்துக்கு எதிரான படம் இலங்கை முஸ்லிம்களை ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களின் பக்கம் திசை திருப்பியுள்ளது. இதுவும் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படும் சில இயக்கஙகளுக்கு ஒரு எச்சரிக்கையான விடயம். முஸ்லிம்களின் எழுச்சிகளையும் போராடும் குணத்தையும் பள்ளிவாசல்களை உடைப்பதனாலும் முஸ்லிம்களின் பொருளாதாரங்களை அழிப்பதனாலும் அடக்கிவிட முடியாது. மதரீதியாக முஸ்லிம்களை சீண்டுவது பேராபத்தில் கொண்டு போய்விடும் என்பதே தற்போது இலங்கையிலும் உலகம் முழுவதும் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் காட்டி நிற்கின்றன. 

எனவே இலங்கையில் முஸ்லிம்கள் விடயத்தில் மேற்கொள்ளப்படும் சிங்கள இனவாத கருத்துக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராக செயற்படும் அமைப்புகள் பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் இனையத்தளங்கள்  தமது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இனவாதக் கருத்துக்களை பரப்பி இனங்களுக்கிடையில் இரத்த ஆற்றை ஓடவிடும் திட்டங்களை கைவிட்டு சகல இனங்களுக்குமிடையிலான புரிந்துனர்வை உருவாக்கி அதனூடாக எப்படி சிங்களவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றலாம் என பார்க்க வேண்டும்.

4 comments:

  1. சகோதரர் அபூ நிதால் அவர்களுக்கு நன்றி. மேலும், நாகர்கள் வரலாறு தொடர்பான தகவல்கள் எங்கிருந்து பெற்றீர்கள் அல்லது அவை எங்கு கிடைக்கும் என்பன பற்றி கொஞ்சம் கூறுவீர்களானால் என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி

    ReplyDelete
  2. அன்பின் சகோதரருக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

    இந்த உணர்வு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டாக வேண்டும், குறிப்பாக அல்லாஹ்வையும் றசூலையும் வைத்து வாக்குக்கேட்டவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.  அரசியல்வாதிகளே! எங்கே உங்கள் கூக்குரல்கள், பணம் பெற்றதால் உங்களின் உணர்வுகள் ஊமையாயிற்றா? எம்மக்களின் கண்மூடித்தனமான நம்பிக்கைகளும் (அரசியல் வாதிகளில்) இன்னும் எல்லா விடயங்களிலும் பின்னோக்கியதுமான தன்மைகளால் - விழிப்பு வருவதென்பது இப்போதைக்கு முஸ்லிம் சமூகத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

    சமூகம் விற்றுப் பிழைக்கும் இந்தப்பணப்பரிமாற்றம் ஒரு காலத்தில் பிணப்பரிமாற்றத்தில் வந்து நிற்கும் அப்போது இதற்கான காரணிகளெல்லாம் என்ன சொல்லப் போகிறார்கள் பார்ப்போம். அதுவரைக்கும் நம்மால் இயலுமான இந்த அகிம்சைப் போராட்டத்தை தொடருவோம். அல்லாஹ் இவ்வாறான பித்னாக்களில் இருந்து எம்மைக்காப்பானாக! ஆமீன்.

    -- கிழக்கான் --

    ReplyDelete
  3. The article is ok.but we don't want to panic so much.because where ever we live,we are the majority community in those places.only we need unity among us.please make more articles about unity of the umma.

    ReplyDelete
  4. Brother naushad as far as i know there are number of muslim families living in small groups in several places across sri lanka. we should think about all. further
    and all muslims in Sl should know about the activities of this racist groups..pls check the link

    http://www.facebook.com/photo.php?fbid=535377993146455&set=a.274866039197653.86923.274859899198267&type=1&theater

    ReplyDelete

Powered by Blogger.