சிரியாவில் ஆசாத் வெறியாட்டம் - பள்ளிவாசல் தகர்ப்பு, அதிலிருந்த 49 பேர் வபாத்
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு ஆதரவாக போராடும் புரட்சிப் படையின் பிடியில் பல நகரங்கள் உள்ளன. அதை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
புரட்சிப்படையின் பிடியில் இருக்கும் மாரெட் அல் நுமான் என்ற நகரை கைப்பற்ற அங்கு நேற்று ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தின. மாரெட் அல் நுமான் நகரின் மீது பறந்த போர் விமானங்கள் வீடுகள் மற்றும் மசூதிகள் மீது 10 குண்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் 2 வீடுகள் மற்றும் ஒரு மசூதி இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கி 49 பேர் பலியாகினர். அவர்களில் 29 பேர் குழந்தைகள்.
ராணுவம் குண்டு வீசியதால் இங்கு ஏராளமான மக்கள் தஞ்சம் அடைந்து இருந்தனர். அவர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. பிணங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடி டெய்ப் ராணுவ முகாமில் இருந்து வந்த போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. எனவே புரட்சிப்படையினர் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்டு தாக்கினார்கள்.
இந்த தாக்குதலில் டாங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சிரியா முழுவதும் இது போன்ற தாக்குதல்கள் மற்றம் வன்முறை சம்பவங்கள் நேற்று நடந்தன. அதில் ஒருநாள் மட்டும் 200 பேர் பலியானதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போராட்டத்தில் இதுவரை 37 ஆயிரம் பேர் பலியாகி இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானில் மாணவி மலாலா சுட்டுக் காயப் படுத்தப் பட்ட சம்பவத்தில் காட்டிய அக்கறையை, சிரியாவில் ஒரு நாளில் 29 குழந்தைகள் கொல்லப்பட்ட நிகழ்வில் ஊடகங்கள் காட்டத் தவறியுள்ளன.
ReplyDelete