புற்றுநோய்க்கு உதவும் திருமணம்..! ஆய்வில் தகவல்
புற்றுநோய் சர்வதேச நோயாக உருமாறியுள்ள நிலையில், அந்நோய்க்கு தீர்வாக திருமணம் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மேரிலேண்ட் மர்லீன் பல்கலைக்கழக மாணவர்கள், பால்டிமோர் ஸ்டீவர்ட் கிரீனிபாம் புற்றுநோய் மையத்துடன் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
நுரையீரல் புற்றுநோயின் 3ம் நிலையில் உள்ள மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையை, 10 ஆண்டுகளுக்கு முன் பெற்ற 168 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், திருமணமாகாதவர்களைவிட, திருமணமானவர்கள் 3 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. திருமணமாகாத ஆண்களை விட, திருமணமான பெண்களுக்கு 46 சதவீத உயிர் வாழும் திறன் அதிகமாக பெற்றுள்ளது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

masha allah...
ReplyDeleteகலியாணம் முடிச்ச பெண்களுக்கு 46 % உயிர் வாழ்ற திறன் அதிகமாயிருக்கு எண்டது
ReplyDeleteசரியாத்தான் இருக்க வேண்டும்,
கலியாணம் முடிச்சதிலை இருந்து புருசன்ட உயிர வாங்குறதுதானே பென்ஜாதியல்ட வேலை, பேந்து இருக்காதே?