Header Ads



இலங்கையரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை

 
தமிழகத்தில் வசிக்கின்ற அல்லது விஜயம் செய்கின்ற இலங்கையர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குமாறு தமிழக அரசாங்கத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அதன் இந்திய கிளையின் நிறைவேற்று தலைவர் ஜீ.ஆனந்தபத்மநாபன் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்துக்கு வருகின்ற அல்லது அங்கேயே வசிக்கின்ற இலங்கையர்களை பாதுகாப்பதற்கு தமிழ்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் இலங்கையர்கள் மீது தமிழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
 
இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தமிழக கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. எனினும் அவற்றை மையப்படுத்தி வன்முறைகள் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.