Header Ads



ஆயுதம் தாருங்கள் - சிரியா போராளிகள் வேண்டுகோள்

 
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கடந்த 20 மாதங்களாக கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இதனால் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் போர் விமானம், பீரங்கிகள் மூலம் குண்டு வீச்சு நடத்துகிறது.

தலைநகர் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் நாட்டின் 2வது பெரிய நகரான அலிப்போ பகுதியில் கடந்த 5 வாரமாக கடும் சண்டை நீடிக்கிறது. இருப்பினும் ஒரு சில இடங்களை மட்டுமே ராணுவத்தினரால் மீண்டும் கைப்பற்ற முடிந்தது.

இந்நிலையில் அலிப்போ நகரில் நேற்று போர் விமானம் குண்டு வீச்சு நீடித்தது. இதில் 7 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் உயிர் இழந்தனர். டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் கார் குண்டு வெடித்ததில் பலர் இறந்தனர். அலிப்போவிற்கு அருகேயுள்ள அல்-பாப் பகுதியில் குண்டு வீசப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்.

மனித உரிமை குழு தலைவர் டேவிட் பீட்ராயஸ் டமாஸ்கசில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அலிப்போ நகரில் கிளர்ச்சியாளர் வசம் இருக்கும் பகுதியை இன்னும் 10 நாட்களில் மீட்டுவிடுவோம் என்று ராணுவ கமாண்டர் உறுதியுடன் கூறுகிறார்.

இதற்கிடையில் ராணுவத்தின் அத்துமீறல்களை தடுக்க ஆயுதம் தேவை என்றும், இதனை எங்களுக்கு தரும்படியும் கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் சிரியா பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தவும், வன்முறையை நிறுத்தவும் உடனே தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

No comments

Powered by Blogger.