Header Ads



சவூதி அரேபியாவில் இருவருக்கு மரண தண்டனை

சவுதி அரேபிய நாட்டில் கொலை, கற்பழிப்பு, ஆயுதக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மதமாற்றம் போன்ற குற்றங்களுக்காக இஸ்லாமிய ஷரியா சட்டப்படி தலை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள அபா நகரை சேர்ந்த அஹமத் பின் ஹசன் செரி என்பவர் சக நாட்டை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இந்த குற்றத்திற்காக அவரது தலையை நீண்ட வாள் கொண்டு வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானி ஒருவர் தனது வயிற்றுக்குள் போதை பொருளை மறைத்து கடத்திய குற்றத்திற்காக மெதினா நகரில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த வருடம் இதுவரை 52 பேரும், சென்ற வருடம் 79 பேரும் தலைவெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மனித உரிமை அமைப்புகள் குறைகூறியுள்ளது.

No comments

Powered by Blogger.