பள்ளிவாசலுக்குள் நுழைந்து தாக்கியவர்கள் திருந்தினார்களா..??
கொஹிலவத்தை அல் இப்றாஹிமிய்யா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இதன் பின்னர் எவ்விதமான அசம்பாவிதங்களையும் ஏற்படுத்தமாட்டோமென பள்ளிவாசலுக்குள் நுழைந்து அடாவடித்தனம் புரிநிதவர்கள் உறுதியளித்துள்ளனர். இதுதொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உத்தரவாதப்பத்திரமொன்றிலும் கைச்சாத்திட்டுள்ளனர்.
பள்ளிவாசலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியமை தொடர்பான சமரச பேச்சுவாத்தையொன்று கொலன்னாவையில் நடைபெற்றபோது இந்த உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி கொஹிலவத்தை அல் இப்றாஹிமிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் அதான் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் மதுபோதையுடனும், சப்பாத்துக் கால்களுடனும் உட்புகுந்த சிங்களவர்கள் இருவர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். பள்ளிவாசலுக்கு அருகில் வசிக்கும் சாமர பெரேரா, சஞ்சீவ பெரேரா ஆகிய சகோதரர்களே இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களாவர்.
குறித்த பள்ளிவாசல் சட்டவிரோதமாக மயானத்திற்குச் சொந்தமான இடத்தில் இயங்குவதாகவும், பள்ளிவாசலுக்கு உறுதிப்பத்திரம் இல்லையெனவும் அவர்கள் இதன்போது வாதிட்டுள்ளனர். பள்ளிவாசலுக்குள் இவர்கள் ஈருவரும் உட்புகுவதற்கு முன்னர் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பெரும்பான்மை சமூக முச்சக்கர வண்டிச் சாரதிகளை பள்ளிவாசலை தாக்க வருமாறும் அழைத்துள்ளனர். எனினும் அவர்களோ இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் அலுவலகத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்போது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பள்ளிவாசல் சட்ட ரீதியான காணியில் இயங்குவதாகவும், அதற்கான உறுதிப்பத்திரங்கள் இருப்பதாகவும், பள்ளிவாசலை தாக்கியவர்களின் தந்தையிடம் கொள்வனவு செய்யப்பட்ட பள்ளிவாசல் காணிக்கான உறுதிப்பத்திரத்தையும் பள்ளி நிர்வாகத்தினர் காண்பித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளிவாசலை தாக்கிய இருவரிடமிருந்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாதென உறுதிப்பத்திரமொன்றில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
1965 ஆம் ஆண்டு இந்தப் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டமையும், 1995 ஆண்டு வக்பு சபையில் இந்தப் பள்ளிவாசல் வக்பு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் வல்ல இறைவன் நிச்சயம் இவர்களைத் தண்டிப்பான். அதாவது பள்ளிவாசலை தாக்கியவர்களையும் மாத்திரம் இன்றி பள்ளிவாசலை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்களையும் தண்டிப்பான். அதுவே எமது பிரார்த்தனை. இது யாராக இருந்தாலும் பரவாயில்லை.
ReplyDeleteKudikkarnkalukkellaam aatthaaram kaadda vendiya kevalamaana nilaikku namadhu samoogam poividdathu intha nilamai needitthaal eppothum porumaiyaaga irukkamudyyaathu allava?
ReplyDeleteAs long as they had apologized let's forgive them and show them the beauties of Islam.
ReplyDelete