Header Ads



ஹஜ் விவகார இழுபறி - அரசாங்கத்தின் திறமையற்ற நிர்வாகமே காரணம்

அஸ்லம் எஸ்.மௌலானா

ஹஜ்ஜுக்கென குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக இருப்பினும் அத்தொகைக்கு அழைத்துச்செல்லும் முகவர்கள் யார் என்பதை அமைச்சர் பௌசி பகிரங்கமாக கூறாததன் காரணமாக ஹஜ்ஜுக்கு தயாரான பலர் பலவிதமான அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டிருக்கிறது. இதற்கு அரசாங்கத்தின் திறமையற்ற நிர்வாகமே காரணமாகும் என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.
 
இது குறித்து உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இம்முறை ஹாஜிகளுக்கென 425.000.00 ரூபாவை அமைச்சர் பௌசி நிர்ணயித்துள்ள போதும் அதனை முகவர்கள் எவரும் நடைமுறைப்படுத்தாத நிலையை காண்கிறோம். 450.000.00 முதல் 7 லட்சம் வரை முகவர்கள் கட்டணம்' அறவிடுவதாகவும், குறைந்த கட்டணம் பற்றி வாதிடும் ஹாஜிகளின் பயணச் சீட்டை திருப்பிக் கொடுத்து விட்டு அதிக கட்டணம் செலுத்துவோரை முகவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் ஹாஜிகள் முறையிடுகின்றனர்.

இத்தகைய நிலைக்கு காரணம் அமைசச்சர் பௌசியின் வேண்டுகோளுக்கிணங்க திணைக்களத்தால் ஹஜ்ஜுக்கு பதிவு செய்தோருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எந்த முகவர் குறிப்பிட்ட தொகைக்கு உடன்பட்டுள்ளார் என்பதை குறிப்பிடாமல் பதிவு பெற்றுள்ள அனைத்து முகவர் பட்டியலும்  இணைக்கப்பட்டுள்ளதேயாகும்.

இதில் உள்ள முக்கிய முகவர்களை ஹாஜிகள் தொடர்பு கொள்ளும் போது குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக கேட்பதாகவும் விரும்பினால் வாருங்கள் என சொல்லப்படுவதாகவும் ஹாஜிகள் முறையிடுகின்றனர்.

அத்துடன் புதிய முகவர்கள் நியமிக்கப்படாமையும் ஒரு காரணமாகும். இதன் காரணமாக சிலர் ஏக போக உரிமை கொண்டாடுவதால் கட்டணம் அதிகரித்து காணப்படுகிறது. முகவர்கள் கூடினால் போட்டித்தன்மை ஏற்படுவதுடன் குறிக்கப்பட்ட கட்டணத்தில்  ஹாஜிகளை அழைத்துச்செல்ல பலர் முன'வருவர்.

வருடா வருடம் வருகின்ற இத்தகைய பிரச்சினைகள் தொடர்வதற்கு அரசாங்கத்தின் நிர்வாக திறமையின்மையும் இது சம்பந்தமான ஆலோசனைகளை பெறாமல் ஏனோதானோ என்ற ஒரு பக்க பார்வையுமே காரணமாகும். ஆகவே அமைச்சர் பௌசி, முகவர்களை அழைத்து யார் யார் குறித்த கட்டணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக் கொள்கிறது.

1 comment:

  1. ஆ, வந்துட்டீங்களே...
    அதுதானே பாத்தன், எங்கடா லெப்பையின்ர சத்தத்தக் காணோம் எண்டு...


    ReplyDelete

Powered by Blogger.