Header Ads



விமல் வீரவன்சவின் சகாவுக்கு கொலை அச்சுறுத்தலாம்

அஸ்ரப் ஏ சமத்

அமைச்சர் விமல் வீரவன்சவின்  தேசிய சுதந்திர முன்ணனி கட்சி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்  திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் தணித்து போட்டியிடுகின்றன. அக் கட்சியின் பிராதான வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா ஜயந்த விஜயசேகரவுக்கு ஆளும் கட்சியினர்களினாலேயே மரண அச்சுருத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் திருகோணமலையில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகமும் சிலரினால் சேதமாக்கப்பட்டுள்ளன.  என அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று  சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீது விசனம் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியளார் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

எங்களது கட்சியின் வேட்பாளரை ஐக்கிய மக்கள் சுதந்திர முண்னனி திருகோணமலை வேட்பாளர் பட்டியலில் உள்வாங்காமையினாலேயே  நாங்கள் எமது கட்சி ஊடாக திருகோணமலையில் தனித்து போட்டியிட நேர்ந்தது. அம்பாறை, இரத்தினபுர கேகாலை, அனுராதபுரம், பொலநருவை ஆகிய மாவட்டங்களில் எமது கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து போட்டியிடுவதற்கு சர்ந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது கட்சி உறுப்பினர்கள் திருகோணமலை அம்பாறையில் நாமல்ஓயா போன்ற இடங்களில்  தங்கி நின்று தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

1 comment:

  1. Don't worry Jayantha, OBATA NIYATHA JAYA! We need your service once again.

    ReplyDelete

Powered by Blogger.