ஜனாதிபதியினை தூக்கு கயிற்றிலிருந்து கழற்றி எடுக்க வாக்கு போடுங்கள் - அமைச்சர் றிசாத்
புல்மோட்டையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
வெற்றிலைச் சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் புலிகளின் எச்சங்களை அழிக்கவும், வடக்கையும்-கிழக்கையும் இணைக்க துடிக்கும் சக்திகளுக்கு அடியினையும் இந்த நாட்டின் ஜனாதிபதியினை சர்வதேசத்தின் தூக்கு கயிற்றிலிருந்து கழற்றி எடுக்கும் ஒரு பலமான ஆயுதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன், இன்று நாம் இஷா மற்றும் சுபுஹூத் தொழுகைகளை மேற்கொள்வதற்கு செல்லும் ஒரு சூழலை ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு செய்யும் நன்றிக் கடனாகும் என்று கூறினார்.
புல்மோட்டையில் இடம்பெற்ற இறுதி பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தமது உரையில் கூறியதாவது,
இந்த தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தான் அன்று புலிகளுக்கு பின்னால் இருந்து அவர்களை இயக்கியவர்கள். அதே சம்பந்தன் தான் இன்றும் இருக்கின்றார். காத்தான்குடியில் பள்ளி கொடல்லவில், ஏறாவூரில் முஸ்லிம்களை சுட்டுத் தள்ளிய புலிகள், மூதுரிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறிய போது, அவர்களை கிராந்தி மலைப்பகுதியில் வைத்து ஆண்களை பிரித்து எடுத்து 50 மேற்பட்டவர்களை உறவுகளின் கண்களுக்கு முன்னால்சுற்றுக் கொண்டார்களே, அதனை இந்த மக்கள் மறந்துவிட முடியுமா, வடக்கில் முஸ்லிம்களை விரட்டிதுடன் அவர்களது சொத்துக்களையெல்லாம் அபகரித்தார்களே அந்த கறைபடிந்த வரலாற்றை மறைக்க முடியுமா என கேட்க விரும்புகின்றேன்.
இவற்றையெல்லாம் செய்து விட்டு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்கள் மீது பாசம் கொண்டு வாக்குகளை கேட்டுவருகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை எமது எதிர்பார்ப்பை அடைய உதவும் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று கூறுகின்றனர். என்னருமை வாக்கள மக்களே.. இதற்கு நாம் காது கொடுத்து வாக்குகளை அளிப்போமெனில் அன்று எதனை நாம் அனுபவித்தோமோ அதனை மீண்டும் அனுபவிக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாக உங்களுக்கு கூற விரும்புகின்றேன்.
மூதுரிலிருந்து முஸ்லிம் வெளியேறி கந்தளாய்க்கு வந்த போது, அன்று மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த நான் மௌலவி கலீல் ஹஸரத் அவர்களை ஜனாதிபதியினை சந்திக்க செய்து இந்த மக்களின் துயர் துடைக்க எடுக்க வேண்டிய ஆலோசனைகளை வழங்கினோம். துணிச்சலும், முஸ்லிம்கள் மீது அதிகமான மதிப்பும் வைத்துள்ள ஜனாதிபதி அவர்கள் புனித ரமழான் ஆரம்பிப்பதற்கு முன்னர் புலிகளை அழித்து அந்த முஸ்லிம் மக்களை அவர்களது மண்ணில் குடியேற்ற உதவி செய்ய வில்லையா? இதனை நாம் மறந்து செயற்பட முடியாது. அவ்வாறு மறப்போமெனில் எம்மை போன்ற செய் நன்றி மறந்தவர்கள் எவரும் இருக்க முடியாது.
தெஹிவளை பள்ளிவாசலுக்கு சென்று ஒரு பௌத்த மத குரு மதக்கடமைகளுக்கு தடைகளை ஏற்படுத்த முற்பட்ட போது நாங்கள் அங்கு சென்று அவருடன் பேசி உரிய நடவடிக்கையெடுத்தோம். ஆனால் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று வரை அங்கு செல்லவில்லை, முஸ்லிம்களுக்கு எவர் அநியாயம் இழைத்தாலும்,அதனை துணிந்து தைரியமாக அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் பேசினோம்.

எமது உரிமைகளை நாம் ஒரு போதும் விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் ஹக்கீம் அவர்கள் வாய் மூடி மௌனியாக இருந்து விட்டு இங்கு வந்து வீர வசனத்தை பேசி மஹிந்த ராஜபக்ஷவை தொலைக்க வேண்டும் என்று கூறுகின்றார். இது என்ன கபட நாடகம். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் தனம் எம்மிடமில்லை, சத்தியத்தையும், உணமையினையும் பேசிததான் நாம் எமது சமூகத்தின் விடிவுக்கான அரசியலை செய்கின்றோம்.
இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு தான் உங்களதும், எதிர்கால சமூகத்தினதும் அனைத்து மேம்பாடுகளுக்கும் இடும் மூலதனமாகும். அந்த மூலதனத்தை காலம் அறிந்து இடுவதற்கு தவறுவீர்கள் எனில் அது இனி ஒரு போதும் பிரயோசனத்தை தறாது என்பதை புரிந்து கொண்டு எதிர்வரும் 8 ஆம் திகதி இந்த கிழக்கு மண் புதிய அரசில் வரலாற்றை படைக்க பங்களிப்பு செய்யுங்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள்விடுத்தார்

It is alright bro; you say not to vote TNA because they were LTTE supporters. How do we vote the the present government when they have the real LTTE such as Karuna and K.P? How many more elections should we vote to the present government to show that we are Thankful? What is the link between the president's gallows and the eastern election?
ReplyDeleteFor how long you all are going to cheat the innocent public by using these magic words?
i would like to say something br saheer, now srilanka moving peace karuna & KP they came under the sri lankan nation so dont worry the president MR not give back to sri lanka 4 LTTE pl casting yr valuuable vote 4 UPFA & conway the message 4 ur favours
ReplyDelete