Header Ads



அமைச்சரவையில் பேசாத பிரச்சினைகளை ஹக்கீம் பேசுகிறார் - ராஜித சேனாரத்னா

மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலையொட்டி ஐ.ம.சு.மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது,
 
வடமத்திய மாகாணத்திலும் சப்ரகமுவயிலும் ஐ.ம.சு.முவுக்கு போட்டி கிடையாது. ஐ.ம.சு.மு. வேட்பாளர்களிடையே தான் போட்டி காணப்படுகிறது.
 
கிழக்கில் த.தே.கூட்டமைப்பும் மு.கா.வும் இனவாதம் பேசி வருகின்றன. அமைச்சரவையில் பேசாத பிரச்சினைகளை ஹக்கீம் கிழக்கில் பேசுகிறார். ஐ.தே.க. குறித்து கட்சி ஆதரவாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். ஒரு போதுமில்லாதவாறு 13 ஐ.தே.க. பிரதேச சபை உறுப்பினர்களும் 3 அமைப்பாளர்களும் அரசுடன் இணைந்துள்ளனர். த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களும் விரக்தியடைந்துள்ளனர். தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வு கோரவில்லை. தேர்தல் முடிவின் பின் த.தே.கூ. விரிசல் ஏற்படும். தமிழ் புலம்பெயர் அமைப்புகளை கண்திறக்க வைக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்றார்.

1 comment:

  1. அப்போ தேர்தலுக்கு முன்னரே முடிவுகள் தீர்மானிக்கப்பட்டாயிற்று.

    ReplyDelete

Powered by Blogger.