வைரத்தை திருடி விழுங்கிய சீனர் வசமாக மாட்டினார் (படம்)
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த வைரத்தைக் களவாடி விழுங்கிய சீனப் பிரஜை ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் 13 ஆயிரத்து 800 அமெரிக்க டொலர் பெறுமதியான வைரத்தையே குறித்த சீனப் பிரஜை களவாடி விழுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைரத்தை காட்சிக்கு வைத்து இருந்தவர்களுக்கு ஒருவர் கதை கொடுக்க மற்றவர் களவாட முயன்றார். ஆயினும் வைரத்தை காட்சிக்கு வைத்து இருந்தவர்கள் களவு முயற்சியை சரியாகவே அறிந்து கொண்டனர்.
சீனக்காரன் வைரத்துடன் ஓட்டம் பிடித்தார். ஆனால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இந்நேரம் பார்த்து வைரத்தை விழுங்கி விட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு எக்ஸ் ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இவரது உணவுக் குழாய்க்குள் கல் போன்ற பொருள் சிக்கி இருப்பது அவதானிக்கப்பட்டது.
உடனடியாக சத்திர சிகிச்சை மூலம் வைரத்தை வெளியில் எடுக்கா விட்டால் சீனக்காரனின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று வைத்திய நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். சத்திர சிகிச்சையின் அவசியம் குறித்து நீதிமன்றத்துக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனக்காரர் தற்போது பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

Post a Comment